எனக்கும் அண்ணாமலைக்கும் இடையே பிரச்னையா? ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்.? வானதி சீனிவாசன் விளக்கம்

Published : Jul 10, 2023, 01:49 PM IST
எனக்கும் அண்ணாமலைக்கும் இடையே பிரச்னையா? ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்.? வானதி சீனிவாசன் விளக்கம்

சுருக்கம்

எந்த ஒரு மாநில அரசையும், ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்க பாஜகவிற்கு விருப்பம் இல்லை எனவும், கலைத்ததும் இல்லை எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

திருமண மேடையில் எதிர்கட்சிகளை திட்டும் ஸ்டாலின்

கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் துளிர்  என்ற திட்டத்தினை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித அவர்,  பெண்கள் பள்ளியில் 8 முதல் 12 ம் வகுப்பு மாணவிகளுக்கு ரத்தசோகை, சர்க்கரை பரிசோதனை முகாம் கோவை தெற்குத் தொகுதியில் செய்வதற்கான திட்டம் துவங்கியுள்ளதாக கூறினார்.  திருமண மேடைகளை எதிர்க்கட்சிகளை திட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்  பயன்படுத்துகிறார் எனவும் பிரதமர் மோடியின் மீது விமர்சனம் வைத்துள்ளார் எனவும் தெரிவித்தார். 

சட்ட விரோதமாக ஆட்சியை கலைத்தது இல்லை

ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்றும் அவர் சொல்லி இருக்கிறார்,எதற்காக இந்த பயம் முதல்வருக்கு வருகிறது எனவும் தெரியவில்லையென கூறினார். அவரது ஆட்சியை, மாநில அரசை கலைப்பதற்கு என்ன காரணங்கள் கூறுவதற்கு இடம் இருக்கிறதோ? அதுவெல்லாம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின்  நினைக்கிறாரா? எனவும் கேள்வி எழுப்பினார். எந்த ஒரு மாநில அரசையும், ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்க பாஜகவிற்கு விருப்பம் இல்லை எனவும், கலைத்ததும் இல்லை எனவும் தெரிவித்தார்.   எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதற்கு பிரதமர் மோடி எரிச்சல் அடைந்திருக்கிறார் எனவும் முதல்வர் பேசியிருக்கின்றார் எனவும்,

மோடி உங்களை பார்த்து பயப்படுவதாக நினைப்பது கற்பனை

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது  என தெரிவித்த அவர், நீங்களே உங்களை பெரிதாக நினைத்துக் கொண்டு, பிரதமர்  மோடி உங்களை பார்த்து பயப்படுவதாக நினைப்பது கற்பனை எனவும் தெரிவித்தார். பிரதமர் மோடி தங்களைப் பார்த்து பயப்படுகிறார் என பேசுவது மாநிலத்தின் பிரச்சனைகளை மூடி மறைக்கவே எனவும், தங்களின் ஆட்சிக்கு ஏதோ பிரச்சனை வரப்போகிறது என்பதைப் போல காட்ட முதல்வர் முயல்கிறார் எனவும் தெரிவித்த அவர், தமிழகத்தின் ஆட்சியை நன்றாக நடத்த ஸ்டாலின்  முயற்சி செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார்.

கடிதம் முழுக்க முழுக்க கற்பனை

தமிழக கவர்னர் குறித்து குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின்  எழுதியிருக்கும் கடிதம் முழுக்க முழுக்க கற்பனை என தெரிவித்த அவர், தேவையில்லாமல் ஒவ்வொரு முறையும் ஆளுநரை விமர்சனம் செய்து , சிக்கலான நிலையை நீங்கள் தான் உருவாக்கிக் கொள்கிறீர்கள் எனவும்  தெரிவித்தார். மாநிலத்தின் கவர்னர் எதற்கு அனுமதி கொடுப்பது ? எதனால் தாமதம் என்பது குறித்த செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செய்தி குறிப்புகள் வருகிறது,  ஒவ்வொன்றிற்கும் கவர்னர் அலுவலகம் பதில் தருவதால் எரிச்சல் வந்திருக்கிறதா எனவும் கேள்வி எழப்பினார்.

அண்ணாமலைக்கும் எனக்கும் பிரச்சனையா.?

அண்ணாமலைக்கும் தங்களுக்கும் பிரச்சனை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பா.ஜ.க மாநில தலைவர்  அண்ணாமலைக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, அக்கவும் தம்பியுமாக சேர்ந்து கட்சியை வளர்க்கின்றோம். நான் தேசிய அரசியலில் இருப்பதால்  கோவைக்கு அவர் வரும் போது  இல்லாமல் இருப்பது போன்ற சூழல் இருக்கிறது எனவும் தெரிவித்தார். எனவே  இருவரும் அடுத்து ஓரே கூட்டத்தில் பங்கேற்பதை போல திட்டமிடுகின்றோம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜி ஒரு உத்தமரா? மாநிலத்தை காக்க வந்த சேவகரா.?குடியரசு தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்- சீறும் அண்ணாமலை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!