ரஜினி காந்து வருமான வரி கட்டிட்டாரா.? அவார்டா... எல்லாமே பொய்ங்க... அதிர விடும் ஜான் பாண்டியன்

By Ezhilarasan BabuFirst Published Aug 1, 2022, 6:05 PM IST
Highlights

வருமானவரி கட்டியதற்காக ரஜினிகாந்துக்கு அவார்டு கொடுப்பதெல்லாம் பொய் என  தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.  அவரின் இந்த கருத்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வருமானவரி கட்டியதற்காக ரஜினிகாந்துக்கு அவார்டு கொடுப்பதெல்லாம் பொய் என  தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.  அவரின் இந்த கருத்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஜினி தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் நடிகர் என்றாலும் அவர் மீது வருமான வரி விஷயத்தில் பல்வேறு பல விமர்சனங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்துக்கு சமீபத்தில் தமிழகத்தில் அதிக வரி செலுத்தினார் என கூறி அவருக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் வரி செலுத்துதல் பிரிவில் அதிக வரி  செலுத்தியதற்காக அவர் உட்பட 4 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் அவரது வருமானத்திற்கு ஏற்ப வரியும் செலுத்த வேண்டும் என்பதே ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இருந்து வருகிறது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வருமான வரி செலுத்துவது என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த வரிசையில் கோடிக்கணக்கான வருவாய் ஈட்டுபவர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்திற்காக உரிய வருவாயை காட்டுவதற்காக வருமான வரித்துறை சார்பில் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது, தற்போது இந்தியாவில் வருமான வரியின் மூலம் மட்டும் ஆண்டுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது,

இதையும் படியுங்கள்: ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான போலீஸ்... தமிழக போலீசை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் விஜயகாந்த்.

ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரி முறை, பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த வரிசையில் ஜூலை 24ஆம் தேதி ஆண்டுதோறும் வருமான வரி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் வருமான வரித்துறை சார்பில் அதிக வரி செலுத்துவதற்கு விருதுகள் வழங்கி கவனிக்கப்படுகிறது.

 இதையும் படியுங்கள்:  மழையினால் பாதிப்புகள் வராத வகையில் நடவடிக்கை... பழனிவேல் தியாகராஜன் உறுதி!!

அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது, இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி சென்னையில் மியூசிக் அகாடமியில் வருமான வரித்துறை சார்பில் வருமானவரி விழா நடைபெற்றது, அதில் புதுச்சேரி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது தமிழகத்தில் அதிக அளவிலான வருமானவரி தனிமனித வருமான வரி செலுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டது. விருதினை  அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆடிட்டர் சதீஷ்குமார் அதிக வருமானம் ஈட்டுகிறாவர்கள் அதுகேற்ப வரி செலுத்தியாக வேண்டும்.

ஓய்வூதியம் பெறுபவர்கள் கூட நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வரி செலுத்துகிறார்கள், ஆனால் பல கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்டுவார்கள் வரியை செலுத்துவதற்காக விருது அளிப்பது என்பது அர்த்தம் இல்லாதது. ரஜினி காந்த்க்கு கொடுத்துள்ள விருதும் இதுபோலத்தான் என்று தெரிவித்துள்ளார்.  

இது ஒரு அரசியல்  வியூகமாக தான் பார்க்க முடிகிறது, ஒருவர் வரி கட்டுவதை வைத்து மட்டும் அவரது உண்மையான வருமானத்தை தீர்மானிக்க முடியாது, அவர்களின் வரவு செலவை ஆராய்ந்து அனைத்து வருவாய்க்கும் வரி கட்டி இருக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார். அப்படியே தங்கள் வருவாய்க்கு ஒருவர் வடிகட்டி இருந்தால், அது அவருடைய கடமை தான் அதை பாராட்ட என்ன இருக்கிறது என கூறியுள்ளார். 

இது ஒருபுறம் உள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ரஜினிக்கு விருது கொடுத்து இருப்பது குறித்து விமர்சித்துள்ளார் இது தொடர்பாக கூறியவர் வருமான வரியை சரியாக செலுத்தினார் என கூறி ரஜினிகாந்துக்கு விருது கொடுத்திருக்கிறார்கள் அது பொய்...

ரஜினிகாந்த் வருமான வரியை ஒழுங்காக கட்டினார் என்றால் அது பொய், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன், ஒருவர் சத்தியமாக  முழு வரியை கட்டியிருக்கிறார் என்றால் அது ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை, அவருக்கு கர்நாடகாவில் இருந்து எங்கெல்லாம் சொத்து இருக்கிறதோ அதையெல்லாம் அளவிட்டு பாருங்கள் தெரியும், அவருக்கு விருது கொடுத்தது என்பது பொய்யான ஒன்று, அவார்டு கொடுக்கிறார்கள் என்றால் அந்த அவார்டை அவர் எப்படி வாங்கினார் என்பது அவருக்குத்தான் தெரியும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

click me!