ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான போலீஸ்... தமிழக போலீசை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் விஜயகாந்த்.

By Ezhilarasan Babu  |  First Published Aug 1, 2022, 5:19 PM IST

ஜனாதிபதியின் சிறப்பு கொடியை பெற்றது தமிழக காவல் துறைக்கு கிடைத்த பெருமை என தேமுதிக நிறுவன தலைவர் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதியின் சிறப்பு கொடியை பெற்றது தமிழக காவல் துறைக்கு கிடைத்த பெருமை என தேமுதிக நிறுவன தலைவர் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக தமிழக காவல்துறை பணியாற்றி வருவதாக பேசப்படும் நிலையில் சென்னையில் நடந்த விழாவில் ஜனாதிபதி யின் சிறப்பு கொடி தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட ஒன்பது மாநில போலீசாருக்கு ஜனாதிபதி சிறப்பு கோடி வழங்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் தென்மாநிலங்களில்  முதலாவதாகவும் இந்தியாவின் பத்தாவது மாநிலமாகவும் ஜனாதிபதியின் சிறப்பு கொடியை தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கிடைத்த பெருமை, மேலும் தமிழகத்தில் டிஜிபி முதல் காவலர்கள்வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருப்பதை வரவேற்கிறேன், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை உங்கள் நண்பன் என்ற சொல்லுக்கு இணங்க மக்களுக்கும், நாட்டிற்கும் பாதுகாப்பாக இருந்து இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக தமிழக காவல் துறையின் பணிகள் சிறக்க வேண்டுமென பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன், தமிழக போலீசாரின் சேவையை பாராட்டி ஜனாதிபதி சிறப்பு கொடி கிடைத்தது போற்றுதலுக்கு உரியது.

இது ஒட்டுமொத்த காவல்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிடைத்த பெருமை, எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினால் மாணவ மாணவிகளின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தூண்டுகோலாக அமையும், அனைத்து உலக நாடுகளும் பாராட்டுக்குரிய வகையில் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் சிறந்த முறையில் நடந்து வருகிறது. இதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை சென்னை ஈர்த்துள்ள தோடு செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. குறுகிய காலத்தில் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி வரும் தமிழக அரசின் செயல் பாராட்டுக்குரியது. 

 

click me!