
கேப்டன் விஜயகாந்த் ஆணையிட்டால் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என அவரது மனைவியும் அக்கட்சி பொருளாருமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தேமுதிகவின் 21-ஆம் ஆண்டு கொடி நாளை ஒட்டி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தனர். அங்கு குழுமியிருந்த தொண்டர்களுக்கு கையசைத்த விஜயகாந்த், கொடிநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், ’’தேமுதிக தனித்து போட்டியிட்டாலும் 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும். நான் சசிகலாவை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் கேப்டன் ஆணையிட்டால் நிச்சயம் போட்டியிடுவேன்’’என்று அவர் தெரிவித்தார்.