விரைவில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார்.. களத்திற்கு தாயாரானது தேமுதிக.. பிரேமலதா அதிரடி மேல் அதிரடி.

Published : Feb 12, 2021, 02:19 PM IST
விரைவில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார்.. களத்திற்கு தாயாரானது தேமுதிக.. பிரேமலதா அதிரடி மேல் அதிரடி.

சுருக்கம்

யார் யார் விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்பதை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும். சசிகலாவை நான் சந்திக்கவுள்ளேன் என்பதை நானே தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்,  

தேமுதிகவின் 21ஆம் ஆண்டு கொடி நாள் விழா கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிரச்சார வாகனத்தில் நின்றவாரு அக்கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார்.  அப்போது பேசிய 

விஜயகாந்த், அனைவருக்கும் கொடி நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா: அனைவருக்கும் கொடி நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜயகாந்த் விரைவில் பிரச்சாரம் செய்வார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தேமுதிக கொடி நாள் விழா கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் 21 ஆம் ஆண்டு விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. விவாதங்களில் தேமுதிக சார்பாக நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இனி அனைத்து விவாதங்களிலும் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பார்கள். 

யார் யார் விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்பதை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும். சசிகலாவை நான் சந்திக்கவுள்ளேன் என்பதை நானே தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன், எனவே இனி செய்தி வெளியிடுவதற்கு முன்பாக தலைமை கழகத்தின் தகவல் பெற்ற பின்பு செய்தியை வெளியிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 7 மண்டலமாக பிரிக்கப்பட்டு தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். 

கூட்டணி குறித்து செய்தியாளர்களை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணி குறித்து அதிமுகவுடன் கேள்வி எழுப்ப வேண்டும். பிரதமர் 3 மணி நேரம் தான் சென்னையில் இருக்க உள்ளார் என்று செய்தி வெளியாகி உள்ளது, ஆனால் இன்னும் எதுவும் உறுதியாகவில்லை என்றார். பிரதமரை வரவேற்க செல்வீர்களா என்று கேட்டதற்கு, தேமுதிக வரவேற்பு அளிக்க அழைத்தால் அதுகுறித்து முடிவெடுக்கப்படும். கூட்டணி பேச்சுவார்த்தை எந்த கட்சியும் தற்போது வரை துவங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.  

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?