நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து... ஆளுங்கட்சியை அலறவிடும் ஸ்டாலின் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Feb 12, 2021, 1:31 PM IST
Highlights

பொதுமக்களிடம் நான் மனு வாங்குவதை பார்த்து, செல்போன் மூலம் புகார் அளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நான் முதலமைச்சரா? அல்லது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதில் அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சனைகளை பொதுமக்கள் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைக்கின்றனர். இந்த பிரச்சாரத்துக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை பல்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொண்டு 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

இதனையடுத்து, 3-வது கட்ட பிரசாரத்தை மு.க. ஸ்டாலின் இன்று விழுப்புரத்தில் தொடங்கினார். விழுப்புரம் அருகே உள்ள காணைகுப்பம் என்ற இடத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகேட்டார். அப்போது ஏராளமான மக்கள் பங்கேற்று மனுக்களை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தனர். மனுக்களை வாங்கிய மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். 

இதனையடுத்து, பொதுமக்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின்;- டெண்டர் விடுவதிலும் ஊழல் செய்வதிலும் தான் அதிமுக அரசு அக்கறை செலுத்துகிறது. நாங்கள் சொல்வதை ஆளுங்கட்சியினர் செய்து வருகின்றனர். மக்கள் தெரிவிக்கும் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின்  அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பொதுமக்களிடம் நான் மனு வாங்குவதை பார்த்து, செல்போன் மூலம் புகார் அளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நான் முதலமைச்சரா? அல்லது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!