சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டது உண்மையா? பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

Published : Feb 12, 2021, 01:01 PM IST
சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டது உண்மையா? பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வர் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வர் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

தேமுதிகவின் கொடி நாளையொட்டி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கொடி ஏற்றி வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த்;- இனி தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்த் பங்கேற்பார். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் தேமுதிக தயாராக உள்ளது. 

கூட்டணி பற்றி இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள். அதிமுகவிடம் போய் கேளுங்கள். கூட்டணியில் எந்த குழப்பமோ, பிரச்சனையோ இல்லை. தேமுதிக பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து நல்ல அறிவிப்பு வரும். தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வர் என தெரிவித்துள்ளார்.கேப்டன் ஆணையிட்டால் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என்றார். 

மேலும், சசிகலாவை சந்திக்க தேமுதிக நேரம் கேட்டதாக தகவல் வெளியானதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் இதுபோன்ற செய்திகளை எங்களிடம் ஒருமுறை விசாரித்து விட்டு போடுங்கள். இது முற்றிலும் தவறான செய்தி. நாங்கள் சசிகலாவை சந்திக்க முயற்சி செய்யவில்லை என்று கூறினார். 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்