விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்.. தேர்தல் களத்தில் நங்கூரம் பாய்ச்சும் முதல்வரின் அறிவிப்பு.!

Published : Feb 12, 2021, 02:18 PM IST
விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்.. தேர்தல் களத்தில் நங்கூரம் பாய்ச்சும் முதல்வரின் அறிவிப்பு.!

சுருக்கம்

திமுக ஒரு குடும்ப கம்பெனி. கார்பரேட் கம்பெனி. ஊர் ஊராக சென்று, அதிமுக ஆட்சி குறித்து ஸ்டாலின் பொய் பேசி வருகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

திமுக ஒரு குடும்ப கம்பெனி. கார்பரேட் கம்பெனி. ஊர் ஊராக சென்று, அதிமுக ஆட்சி குறித்து ஸ்டாலின் பொய் பேசி வருகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;- கனிமொழி போகும் இடமெல்லாம் பொய் பிரசாரம் செய்து வருகிறார். நாள் புள்ளி விவரத்துடன் பேசுகிறேன். தொலைபேசியில் புகார் செய்தாலே மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும். 1100 என்ற எண்ணில் குறைகூறி தீர்வு காணும் திட்டத்தை ஸ்டாலின் சொல்லி நான் அறிவிக்கவில்லை. ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயனடையும் வகையில், விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். குடிமராமத்து பணி மூலம் 6,011 ஏரிகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திருப்பூரில் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மையம்  தொடங்கப்படும்.  

மேலும், திமுக ஒரு குடும்ப கம்பெனி. கார்பரேட் கம்பெனி. ஊர் ஊராக சென்று, அதிமுக ஆட்சி குறித்து ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். மக்களை பற்றி கவலைப்படாத கட்சி திமுக. மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது திமுக என்ன செய்தது என காட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?