உங்களை கொல்ல வந்தவன் பிடிபட்டானா..? மு.க.ஸ்டாலினுக்கு பழைய சம்பவத்தை நினைவூட்டி எஸ்.வி.சேகர் அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Oct 16, 2019, 4:20 PM IST
Highlights

உங்களை கொல்ல வந்தவன் மீது வழக்கு நடந்ததா? தண்டனை கொடுக்கப்பட்டதா? என மு.க.ஸ்டாலினுக்கு பாஜக ஆதரவாளர் எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார். 

சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றால், மாமல்லபுர சந்திப்பின் போது சீனாவிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் வந்தது ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். ஒரு நாட்டு அதிபர் வேறு நாடுகளுக்கு செலும்போது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் உடன் செல்வது நடைமுறையே என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இதற்கு தனது டவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ள பாஜக ஆதரவாளர் எஸ்.வி.சேகர்,  ‘’உங்களை மதுரை ரயில் நிலையத்தில் யாரோ சிறு கத்தியால் காயப்படுத்த அல்லது கொல்ல  வந்த சம்பவத்திற்கு பிறகுதானே மத்தியப்படையின் பாதுகாப்பு  வழங்கப்பட்டது.

அது எந்த ஆட்சியில் நடை பெற்றது. அந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததா..? சந்தி சிரித்ததா⁉️ அந்த கத்தியால் குத்த வந்தவன் பிடிக்கப்பட்டானா? வழக்கு நடந்ததா? தண்டனை கிடைத்ததா? ஒய் கேட்டகிரி பாதுகாப்பு வாங்க நடந்த நாடகமா? அதற்கே முடிவு தெரியவில்லை ‘’ எனப் பதிவிட்டுள்ளார். 

உங்களை மதுரை ரயில் நிலையத்தில் யாரோ சிறு கத்தியால் காயப்படுத்த / கொல்ல வந்த சம்பவ்த்திற்கு பிறகுதானே CRPF -Y பாதுகாப்பு வழங்கப்பட்டது. அது எந்த ஆட்சியில் நடை பெற்றது. ⁉️⁉️அந்த ஆட்சியில் சட்டம் ஒயுங்கு சிறப்பாக இருந்ததா⁉️சந்தி சிரித்ததா⁉️ https://t.co/kuGYwJbwyh

— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER)

 

எஸ்.வி.சேகரின் இந்த பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

click me!