தவறாக பரப்பப்படும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வீடியோ..!

By Thiraviaraj RMFirst Published Oct 16, 2019, 3:38 PM IST
Highlights

  2017ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி விவசாயிகளுடன் பொன்முடி உற்சாகமாக ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தவறாக இந்த வீடியோவை பரப்பி வருகின்றனர்.

விக்ரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடக்க இருக்கிறது. தொகுதிகளிலும் அதிமுக - திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள்  தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நாங்குநேரி தொகுதியை விட திமுக- அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதும் விக்கிரவாண்டி தொகுதியில் உக்கிரம் அதிகம். அதிமுக சார்பாக முத்தமிழ்செல்வன் போட்டியிடுகின்றார். திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.  பிரச்சாரத்தின் போது உற்சாக மிகுதியால் குத்தாட்டப்பாடலுக்கு நடனமாடியாதாக அவர்,   2017ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி விவசாயிகளுடன் பொன்முடி உற்சாகமாக இருந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

நேற்று விக்ரவாண்டி தொகுதியில் அதிமுக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்மேடு ஊராட்சி பகுதிக்கு அவர் வந்தார். அந்தப் பகுதியில் இருக்கும் அதிமுகவினர் சார்பாக அவரை வரவேற்கும் விதமாக பறையிசை இசைக்கப்பட்டு கொண்டிருந்தது. அந்த இசையைக் கேட்டு உற்சாகமடைந்த அமைச்சர் கருப்பண்ணன் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென சாலையில் நடனம் ஆட ஆரம்பித்தார்.

"

அதைப்பார்த்த தொண்டர்களும் பொதுமக்களும் திகைத்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். அங்கிருந்த தொண்டர்கள் சிலர் அமைச்சரோடு சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். சில நிமிடங்கள் நடனமாடிய அவர் பிறகு அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதற்கு போட்டியாக பொன்முடி உற்சாகமாக விவசாயிகளுடன் ஆடிய வீடியோவை தவறாக பரப்பி வருகின்றனர். 

click me!