சிங்கம் சிறையில் இருப்பதால் சிறு குரங்குகள் வாய்க்கு வந்தபடி உளறுகின்றனர்... சசிகலா விவகாரத்தில் அமைச்சர்களை சாடும் டி.டி.வி..!

Published : Oct 16, 2019, 02:54 PM IST
சிங்கம் சிறையில் இருப்பதால் சிறு குரங்குகள் வாய்க்கு வந்தபடி உளறுகின்றனர்... சசிகலா விவகாரத்தில் அமைச்சர்களை சாடும் டி.டி.வி..!

சுருக்கம்

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அ.தி.மு.க.வை ஆதரிப்பார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் யார், யாரோ உளறுவதற்காக என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். வேறு கேள்வி கேளுங்கள். வேடிக்கையாக பேசுவதை கேள்வியாக கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

துரோகம் செய்தவர்களுடன் ஒருபோதும் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ஒரே சின்னம் பெற்று விரைவில் தேர்தலில் போட்டியிடுவேன். அமமுகவிற்கு சின்னம் பெறுவது தொடர்பான விசாரணை டெல்லி தேர்தல் ஆணையத்தில் நாளை நடைபெறுகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் மனுக்களை முறியடித்து எங்கள் கட்சிக்கு தனி சின்னத்தை பெறுவோம். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிட்டு மக்களை குழப்ப விரும்பவில்லை. ஆகையால், ஒரு பொது சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறினார். 

ராஜீவ் காந்தி படுகொலை பற்றி சீமான் தேவையில்லாத கருத்துகளை பேசக் கூடாது. ஒரு பிரதமரின் இறப்பு பற்றி இப்படி பேசுவது சரியல்ல. சீமான் பேசியதை திரும்ப பெற்றுக் கொண்டால் நல்லது. 

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அ.தி.மு.க.வை ஆதரிப்பார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் யார், யாரோ உளறுவதற்காக என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். வேறு கேள்வி கேளுங்கள். வேடிக்கையாக பேசுவதை கேள்வியாக கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது.

விரைவில் ஒரு சில துரோகிகளை நீக்கி விட்டு மற்ற அனைவரும் எங்களோடு வந்து இணைவார்கள். சிறையில் இருப்பவர் பேச முடியாத காரணத்தால் வெளியே இருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?