தமிழுக்கு ஏடு திறந்தநாள்... தமிழர்க்குச் சூடு பிறந்தநாள்... கருணாநிதிக்கு வைரமுத்து புகழாரம்..!

Published : Jun 03, 2021, 11:37 AM IST
தமிழுக்கு ஏடு திறந்தநாள்... தமிழர்க்குச் சூடு பிறந்தநாள்... கருணாநிதிக்கு வைரமுத்து புகழாரம்..!

சுருக்கம்

மேடை மொழிக்கு மீசை முளைத்தநாள். வெள்ளித் திரையில் வீரம் விளைத்தநாள். வள்ளுவ அய்யனை வையம் அறிந்தநாள்.


ஜூன் 3ம் நாளான இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அனைவரும் கருணாநிதி பிறந்த நாளை தமிழகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். 

 

இதனையடுத்து கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஜூன் 3 கலைஞர் பிறந்தநாள். தமிழுக்கு ஏடு திறந்தநாள்.  தமிழர்க்குச் சூடு பிறந்தநாள். பகுத்தறிவுக்குப் பிள்ளை பிறந்தநாள். பழைமை லோகம் தள்ளிக் களைந்தநாள். மேடை மொழிக்கு மீசை முளைத்தநாள். வெள்ளித் திரையில் வீரம் விளைத்தநாள். வள்ளுவ அய்யனை வையம் அறிந்தநாள். வைரமுத்துவின் ஆசான் பிறந்தநாள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி