
தினம் தினம் ஆரவாரமான தமிழக சட்டசபையில் இருக்கும் பஞ்சாயத்துகளுக்கு நடுவில் சபாநாயகர் தனபாலுக்கும், விஜயதாரணி எம்.எல்.ஏ.வுக்கும் இடையிலான உரசலதான் சைடு ஸ்டேஜில் செம்ம ஹிட்டாகி இருக்கிறது.
அதாவது பேரவையின் முதல் நாளன்று கேள்வி நேரத்தின் போது கேள்வி கேட்டுக் கொண்டிருந்த விஜயதாரணியை மறித்து சபாநாயகர் உட்கார சொன்னதால் தாரணி அப்செட் ஆனார் . வெளியே வந்து மீடியாவிடம் ‘அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் போல் சபாநாயகர் நடந்து கொள்கிறார்.’ என்று வெடித்துவிட்டு போனார்.
இந்த விவகார கமெண்ட் அப்படியே சபாநாயகரின் காதுகளுக்கு பாஸ் ஆனது. அவர் எக்கச்சக்க டென்ஷனாகிவிட்டார்.
விளைவு, இரண்டாம் நாளான வியாழனன்று விஜயதாரணியை ஒரு கட்டத்தில் சபாநாயகர் எச்சரிக்க, இவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க என்று தனி மோதல் தலையெடுத்தது தனிக்கதை.
அதாவது இரண்டாம் நாள் பேரவைக்கு வந்த விஜயதாரணி ‘நேற்று என்னை சபாநாயகர் கேள்வி கேட்கவே அனுமதிக்கல. இந்த ஆட்சியில சட்டமன்றம் கூடுறதே அதிசயம். இதுல கேள்வி கேட்கவும், பேசவும் அனுமதிக்கலேன்னா எப்படித்தான் என் தொகுதி பிரச்னைகளை பேசுறது?’ என்று சக உறுப்பினர்களிடம் சத்தமான வார்த்தைகளில் குறைபட்டுக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்து எரிச்சலான சபாநாயகர் “சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு தரும் வகையில் இருக்கையில் அமர்ந்துபேசிக் கொண்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.” என்று வார்னிங் வார்த்தைகளை தெறிக்கவிட்டார்.
இதில் அதிர்ந்து போனாலும் பின் விஜயதாரணி தன்னை சமாதானம் செய்து கொண்டார். ஒவ்வொரு கேள்வி வாய்ப்பின் போதும் கேள்வி கேட்கவும், வாய்ப்பும் கேட்டு கையை உயர்த்தியபடியே இருந்தார் தாரணி. ஆனால் சபாநாயகர் அவருக்கு வாய்ப்பே வழங்கவில்லை. இதில் மீண்டும் ஆதங்கமானார் எம்.எல்.ஏ.
சபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு இடையில் நடக்கும் மோதல்களுக்கு இடையில், சபாநாயகர் மற்றும் விஜயதாரணிக்கு இடையிலான இந்த உரசல் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது என்றால் அது பொய்யில்லை.
ஸ்பீக்கரை ‘மாவட்ட செயலாளர் போல் நடக்கிறார்!’ என்று போட்டுத்தாளித்த தாரணி அடுத்து என்ன சொல்லப்போகிறாரோ!