"என் உயரம் எனக்கு தெரியும்"..! " கருணாநிதியை" பற்றி வாய் திறந்த "தேவேகவுடா"...!

First Published May 22, 2018, 6:47 PM IST
Highlights
devegowda says about karunanidhi


தேவகெளடா தலைவர் கலைஞர் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்  ..என்று நீங்களே  பாருங்கள்...

அவரை பற்றிய  கருத்து :

கலைஞர் தெற்கில் இருந்து கொண்டே குறைந்தது கால் நூற்றாண்டு காலம் வடக்கை தீர்மானிப்பவராக இருந்தவர்...அவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் எல்லோரிடம் பணிவையே கடைப்பிடிப்பார் ...

கர்நாடகா தமிழ்நாடு என்றால் முதலில் காவிரி தான் நினைவுக்கு வரும் கலைஞர் முதல்வராக இருக்கும் காலத்தில் தண்ணீரை பெருவதில் அவரின் செயல்பாடுகள் கடிதம் எழுதுவார் தொடர்ந்து....

அப்போதைய முதல்வர் தேவாஜ் அரஸ் இருந்த போது அவரை நேரில் சந்தித்து "தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர் மறுத்து விடாதீர்கள்" என்று உருக்கமாக கேட்பார் 

தண்ணீர் தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என்று நான் கூறுவேன் அப்போது நான் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில்... ஆனால் கலைஞர் முதல்வரை சந்தித்ததோடு இல்லாமல் எதிர்பாராத சூழலில் என்னையையுப் சந்தித்து "நீங்களும் ஒரு விவசாயி சக விவசாயிகளின் வலியை புரிந்து கொள்ளுங்கள்... மனது வையுங்கள" .....

என்று உருக்கமாக பேசி தண்ணீர் பெற்று விடுவார்.... இது நான் முதல்வராக இருக்கும் காலத்திலும் நடந்தது

எப்படியாவது காவிரி தண்ணீர் கலைஞர் ஆட்சியில் வந்து விடும் தமிழகத்திற்கு ....

1996 தேர்தல் காங்ரஸ் - பிஜேபி கட்சிகள் ஆட்சி அமைக்கும் அளவில் வெற்றி பெற வில்லை

மத்தியில் மதவாத அரசு வந்து விட கூடாது என்பதற்காக மாநில அரசுகள் கையில் எடுத்த ஆயுதம் ஐக்கிய முன்னணி......

பிரதமர் தேர்வு

எல்லோருடைய தேர்வும்  வி.பி.சிங் ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார்
அடுத்து உச்சரிக்கப்பட்ட பெயர் கருணாநிதி

என்ன  சொன்னார்  கருணாநிதி ..!

ஆனால் அவர் சொன்னது என் உயரம் எனக்கு தெரியும் என்று சொல்லி மறுத்து விட்டார் அடுத்த பெயர் மூப்பனார் ஆனால் அவருக்கு பலர் சாதகமாக இல்லை ஆனால் கலைஞர் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தார். இந்த முறை தெற்கிலிருந்து தான் ஒருவர் பிரதமர் என்று ....

அந்த சூழலில் தான் நான் பிரதமர் ஆனேன். நான் பிரதமர் ஆவதற்கு பெரிதும் உழைத்தவர் கலைஞர் .

நான் பிரதமராக இருந்த 10 மாதத்தில், கலைஞரிடம் இருந்து அதிகம் கேட்ட வார்தை

"தெற்கிலிருந்து போயிருக்கீன்றீர்கள் தெற்கிற்கு கூடுதலாக நல்லது செய்யுங்கள்" என்பது தான்

அரசியல் சார்ந்த என் எதிர்நிலைபாட்டை மனதில் வைத்து கொண்டு வன்மத்தையோ பகையையோ ஒரு நாளும் வெளிப்படுத்தாதவர் ...

click me!