உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் - முதல்வர் அறிவிப்பு

Asianet News Tamil  
Published : May 22, 2018, 06:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் - முதல்வர் அறிவிப்பு

சுருக்கம்

Rs 10 lakh per family for deaths - Chief Minister announcement

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை  மூடக்கோரி அப் பகுதி மக்கள் அமைதியான முறையில் 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட முடிவு எடுத்தனர். இதற்காக வணிகர்கள் இன்று முழுவதும் கடையடைப்பு நடத்தி பேரணியாக சென்று முற்றுகையிட திட்டமிட்டனர். இந்த பேரணிக்கு போலீஸ் தடை உத்தரவு போட்ட்து. 144 தடை உத்தரவை மீறி இன்று காலை மக்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர். இவர்களை பல்வேறு வகையில் காவல்துறை தடுத்து பார்த்த்து. போராட்டக்கார்ர்கள் காவல்துறை வாகனத்தை கவிழ்த்தி போட்டு சூறையாடினர்.

ஆயிரக்கணக்காண மக்கள் ஒன்றுகூடியதால் காவல்துறை ஓடி ஆட்சியர் அலுவலகத்தை பாதுகாக்க முனைந்தது. மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை
முற்றுகையிட்ட்தும் அங்குள்ள் வாகனத்தை தீயிட்டு கொளுத்தி ஆட்சியர் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனை அடுத்து
போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். 

இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், சிறு காயம் ஏற்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுடன் நேருக்கு நேர் மோதல்.. விஜய் களமிறங்கும் தொகுதி இதுதான்... தவெகவின் ‘வி’ சென்டிமெண்ட்..!
எடப்பாடியை கவிழ்க்க ஓபிஎஸ்... ஸ்டாலின் அதிரடி வியூகம்..! தென்மாவட்டங்களில் செக்..!