தூத்துகுடியில் நடந்தது அரச பயங்கரவாதம்... போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி ரத்தத்திலா... கமலஹாசன் கண்டனம்

Asianet News Tamil  
Published : May 22, 2018, 06:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
தூத்துகுடியில் நடந்தது அரச பயங்கரவாதம்... போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி ரத்தத்திலா... கமலஹாசன் கண்டனம்

சுருக்கம்

kamal hassan statment about sterlite protest death

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடிவந்தனர். அப்போதெல்லாம் அதை கண்டும் காணாமல் இருந்த தமிழக இருந்த அரசாங்கம். இன்று மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது மக்களை ஒடுக்குவதற்காக இன்று துப்பாக்கி சூட்டில் காவல்துறை இறங்கியது இதில் 7 பேர் பலியாகிவுள்ளனர். 3 பேர்  நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் 65 பொதுமக்கள் தடியடியில் காயமடைந்துள்ளனர்.

இதில் வெனிஸ்டா பள்ளி தேர்வுக்காக காத்திருக்கும் மாணவியும் பலியாகிவுள்ளார் என்பது வருந்த்த்தக்கது - இளம் வயது மற்றும் மூத்தவர்கள் என பத்து பேர்இறந்துள்ளனர். இதற்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.இச்செயலை மக்கள் நீதி மய்யம்  வன்மையாக கண்டிக்கிறது– இது ஒரு அரச பயங்கரவாதம். துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது யார்? எனத் தெரிய வேண்டும் பேருக்கு ஒரு காவல் அதிகாரியை பதவி நீக்கம் செய்து தப்பிக்க முடியாது. பேச்சுவார்த்தை நடத்தாமல் துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்? தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது.

போராட்டத்திற்கு இரத்தத்தினால் முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது. எனக் கூறினார் திட்டமிட்ட கொலையாக இருக்கக் கூடாது, குறிதவறி விட்டதுஎன்று சொன்னாலும் அவமானமே. ஸ்டெர்லைட்டுக்கு சின்ன பூட்டு போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கலாம். இந்தப் பிரச்சினையை சுலபமாக தீர்த்திருக்கலாம். அரசு இதை செய்யத் தவறி விட்டது

PREV
click me!

Recommended Stories

திமுக அரசில் 4 முதல்வர்கள்..! தேர்​தலின்​போது அமைச்​சர்​களுக்கு நேரப்போகும் கதி..! பகீர் கிளப்பும் இபிஎஸ்..!
பாஜகவுடன் நேருக்கு நேர் மோதல்.. விஜய் களமிறங்கும் தொகுதி இதுதான்... தவெகவின் ‘வி’ சென்டிமெண்ட்..!