
தூத்துக்குடியில் மிகப் பெரிய கலவரம் நடந்து வரும் நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்தாத, செயலற்றுப்போன ஆட்சி நடைபெற்று வருவதாக மு.க.ஸ்டாலின் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப் பகுதி மக்கள் அமைதியான முறையில் 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட முடிவு எடுத்தனர். இதற்காக வணிகர்கள் இன்று முழுவதும் கடையடைப்பு நடத்தி பேரணியாக சென்று முற்றுகையிட திட்டமிட்டனர். இந்த பேரணிக்கு போலீஸ் தடை உத்தரவு போட்ட்து. 144 தடை உத்தரவை மீறி இன்று காலை மக்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர். இவர்களை பல்வேறு வகையில் காவல்துறை தடுத்து பார்த்த்து. போராட்டக்கார்ர்கள் காவல்துறை வாகனத்தை கவிழ்த்தி போட்டு சூறையாடினர்.
ஆயிரக்கணக்காண மக்கள் ஒன்றுகூடியதால் காவல்துறை ஓடி ஆட்சியர் அலுவலகத்தை பாதுகாக்க முனைந்தது. மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை
முற்றுகையிட்ட்தும் அங்குள்ள் வாகனத்தை தீயிட்டு கொளுத்தி ஆட்சியர் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனை அடுத்து
போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை தொடர்பாக பேசியதாக தெரிகிறது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானது குறித்து அப்போது அவர் கண்டனம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
கிரிஜா வைத்தியநாதனை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டும். மேலிடத்து உத்தரவு வராமல் இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்க வாய்ப்பில்லை. குருவியை சுடுவது போன்று நடத்திய போலீசாரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இந்த அரசு தலா ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றார்.
தூத்துக்குடியில் சகஜ நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும், போராடியவர்களை அழைத்து பேசியிருந்தால், விபரீத நிலைமை ஏற்பட்டிருக்காது என்று கூறினார். மக்கள் போராட்டம் குறித்து முன்கூட்டியே அறிந்தும் அரசு கோட்டை விட்டது என்றார். மிகப் பெரிய கலவரம் நடந்து வரும் நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்தாத ஆட்சி நடைபெற்று வருவதாகவும் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார்.