தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேட்டு குட்டிச்சுவரா போச்சு.. அதுக்கு இதுவே சாட்சி.. ஆளுங்கட்சியை அலறவிடும் OPS.!

Published : Apr 09, 2022, 12:46 PM ISTUpdated : Apr 09, 2022, 12:49 PM IST
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேட்டு குட்டிச்சுவரா போச்சு.. அதுக்கு இதுவே சாட்சி.. ஆளுங்கட்சியை அலறவிடும் OPS.!

சுருக்கம்

அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் அழிக்கும் நோக்கில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியதை போல தற்போது அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தையும் நிறுத்தியுள்ளனர். அதிமுக ஆட்சியில் மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கி வருகிறது. 

மாணவ, மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்தும் அளவுக்கு சமுதாயத்தில் சீரழிவு ஏற்பட்டு உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். 

ஓபிஎஸ் ஆலோசனை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி பண்ணை இல்லத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்;- உள்ளாட்சித் தேர்தலில் கட்சி நிர்வாகிகளே அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டனர். இனிவரும் காலங்களில் நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அடுத்து வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் எதுவாக இருந்தாலும், அதில் அதிமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கோபத்தில் மக்கள்

அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் அழிக்கும் நோக்கில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியதை போல தற்போது அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தையும் நிறுத்தியுள்ளனர். அதிமுக ஆட்சியில் மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு சொத்து வரி உயர்வை அறிவித்து மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் திமுக அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

சட்டம், ஒழுங்கு சீரழிவு

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் டன் கணக்கில் கஞ்சா பிடிபடுகிறது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மாணவ மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்தும் அளவுக்கு சமுதாயத்தில் சீரழிவு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் திமுக அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை. இவையெல்லாம் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது என்பதைக் காட்டுகிறது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- பாலியல் புகாரில் சிக்கும் திமுவினர்...? ரவுடிகளை கண்டு அஞ்சும் காவல்துறை...! ஸ்டாலினை சீண்டும் ஓபிஎஸ்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கொடநாடு வழக்கில் அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை..! திடீர் கோடீஸ்வரர்களான முக்கிய மூளைகள்..! பகீர் கிளப்பும் வழக்கறிஞர்கள்..!
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல்..! சட்டப்படி நடவடிக்கை எடுக்காத திமுக அரசு..! களத்தில் இறங்கிய அதிமுக..!