ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட் பரிசு... அமைச்சர் சக்கரபாணி மாஸ் அறிவிப்பு..!

Published : Apr 09, 2022, 07:12 AM ISTUpdated : Apr 09, 2022, 07:16 AM IST
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட் பரிசு... அமைச்சர் சக்கரபாணி மாஸ் அறிவிப்பு..!

சுருக்கம்

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் தரம் இல்லை என்று புகார் வந்துள்ள நிலையில் இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி விநியோகிக்கப்படும் என்றும் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான 260 கிடங்கு வளாகங்களில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பாக்கெட் மூலம் அரிசி

தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து பேசினார். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் தரம் இல்லை என்று புகார் வந்துள்ள நிலையில் இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி விநியோகிக்கப்படும் என்றும் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.

ஊழியர்களுக்குப் பரிசுத் தொகை

குறிப்பாக, விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களின் பணியை மேம்படுத்த மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்கள்/எடையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும். மாநில அளவில் விற்பனையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.15,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். அதுபோன்று எடையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.6,000, மூன்றாம் பரிசு ரூ.4,000 வழங்கப்படும்.

மாவட்ட அளவில் விற்பனையாளர்களுக்கு முதல் பரிசாகரூ.4,000 , இரண்டாம் பரிசாக ரூ.3,000, அதுபோன்று எடையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000, இரண்டாம் பரிசாக ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.

கணினி மயமாக்கப்படும்

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் (கேழ்வரகு ) வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான 260 கிடங்கு வளாகங்களில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.90 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.50 கோடி மதிப்பீட்டில் முழுமையாகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கணினி மயமாக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- Ration shops: குடும்ப அட்டைத்தாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி ரேஷனில் இது கட்டாயம்.. மாஸ் காட்டும் தமிழக அரசு.!

PREV
click me!

Recommended Stories

விஜய் எல்லாம் அதிமுகவை விமர்சிக்கலாமா..? தவெக-வே லாட்டரி பணத்தில்தான் நடத்தப்படுது.. ஜெயகுமார் அதிரடி அட்டாக்..!
உறுதி கொடுத்த ராகுல்..! இறுதியான திமுக கூட்டணி..! அறிவாலயம் வளைத்த கட்சிகளின் டீடெய்ல் லிஸ்ட்..!