தன் பதவியை காப்பாற்றி கொள்ளதான் இபிஎஸ் நீட் தேர்வை அனுமதித்தார்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

Published : Apr 08, 2022, 10:04 PM IST
தன் பதவியை காப்பாற்றி கொள்ளதான் இபிஎஸ் நீட் தேர்வை அனுமதித்தார்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

சுருக்கம்

எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பதவியினை காப்பாற்றி கொள்ளவே நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதித்ததாக முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பதவியினை காப்பாற்றி கொள்ளவே நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதித்ததாக முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினர். அதை தொடர்ந்து ஜி.கே.எம் காலணியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இறுதியாக செம்பியம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அனிதா அச்சிவர்ஸ் அக்கடமியில் பயின்ற 223 மாணக்கர்களுக்கு மடிக்கணினிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்ன தான் தமிழகத்திற்கு ஒட்டு மொத்தமாக முதலமைச்சராக இருந்தாலும் இந்த கொளத்தூர் தொகுதிக்கு வரும் போது அன்பு, பாசம் கூடுதலாக இருக்கும். நீட் தேர்வு பொறுத்த வரை கலைஞர் மற்றும் ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் வரவில்லை. அதன் பின் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது தன்னுடைய பதவியை காப்பாற்றி கொள்ள நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்தார்.

நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதில் முதல் மரணம் ஏற்பட்ட மாணவி தான் அனிதா. அதன் அடிப்படையில் தான் கொளத்தூர் தொகுதியில் அனிதா அச்சிவர்ஸ் அகாடமி கொண்டு வந்தேன். அனைத்து துறைகளிலும் தமிழகம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!