சென்னையில் தனக்கென சொந்த வீடு இல்லை என்றும், வாடகை வீட்டிலேயே தான் வசித்து வருவதாகவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனக்கென சொந்த வீடு இல்லை என்றும், வாடகை வீட்டிலேயே தான் வசித்து வருவதாகவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிள்ளைகளின் படிப்புக்காக சென்னையில் வாடகையில் இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர், குட்கா சட்டவிரோத விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக அவர் மீது புகார் உள்ளதைத் தொடர்ந்து, அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: இது இந்துக்கள் நாடுதான்.. ஆ.ராசாவை ஓங்கி அடித்த பிரேமலதா விஜயகாந்த்.
விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு தடையில்லா சான்றிதழ் வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனடிப்படையில் நேற்று அவரது இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, அவரது இல்லத்தில் 18.37 லட்சம் ரோக்கம் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் பல சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதையும் படியுங்கள்: பிரதமர் மோடி தினமும் 3 உடைகள் மாற்றுகிறார்.. உங்களுக்கு ராகுலை பற்றிப்பேச தகுதியில்லை.. நாராயணசாமி.
பல கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு வீடு உள்ளதாகவும் தகவல் வெளியானது, இந்நிலையில் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னையில் 100 பேர் குடியிருக்கும் ஒரு சாதாரண குடியிருப்பில் தங்கி உள்ளேன், அங்கும் கூட வாடகையில் தான் இருக்கிறேன், எனக்கென்று சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பெல்லாம் இல்லை, இதேபோல் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் எனக்கென்று தனிப்பட்ட வசதிகள் எதுவும் இல்லை, எனது சொந்த ஊரிலேயே எனக்கு சொந்த வீடு இருக்கிறது.
சென்னையில் வாடகையில் தான் இருக்கிறேன், என்னுடைய குழந்தைகள் படிப்புக்காக அடையாளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வருகிறேன், சொகுசு வசதி மற்றும் பல கோடி ரூபாய்கள் வீடு வைத்திருப்பதாக கூறுவதெல்லாம் தவறான தகவல்கள் என அவர் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய அமைச்சர் பதவியில் இருந்த விஜயபாஸ்கர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தனக்கு சென்னையில் சொந்தமாக வீடு கூட இல்லை என அவர் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.