பிரதமர் மோடி தினமும் 3 உடைகள் மாற்றுகிறார்.. உங்களுக்கு ராகுலை பற்றிப்பேச தகுதியில்லை.. நாராயணசாமி.

By Ezhilarasan BabuFirst Published Sep 14, 2022, 3:31 PM IST
Highlights

பிரதமர் மோடி தினமும் மூன்று உடைகள் மாற்றுகிறார் என்றும், அவருக்கு இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து உடைகள் வருகிறது என்றும், எனவே ராகுல் காந்தி பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு அருகதை இல்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தினமும் மூன்று உடைகள் மாற்றுகிறார் என்றும், அவருக்கு இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து உடைகள் வருகிறது என்றும், எனவே ராகுல் காந்தி பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு அருகதை இல்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியின் பாதயாத்திரையை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேலி செய்துள்ள நிலையில் நாராயணசாமி இவ்வாறு கூறியுள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன, 2024-ல் மீண்டும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் காணாமல் போயுள்ள நிலையில் மீண்டும் கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்றும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பிலும் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரம்  நடைபயணம் தொடங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்:  மனித நேய முதல்வரே, நீங்கள் உதவா விட்டால் யார் உதவுவார்கள்.? ஸ்டாலின் நெஞ்சை பிடித்து உலுக்கிய தமிமுன் அன்சாரி

மதத்தின் பெயரால் நாட்டை  பிடிப்பவர்களுக்கு எதிராகவும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறும் வகையிலும் இந்த  யாத்திரை தொடங்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவரின் இந்த யாத்திரைக்கு பொதுமக்கள் ஏகோபித்த ஆதரவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பாஜகவினர் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையை கிண்டல் அடித்து, கேலி பேசி வருகின்றனர். இந்நிலையில்தான் புதுச்சேரியில் இன்று செய்தியாளர் சந்தித்த முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, ராகுலின் பாதயாத்திரையை விமர்சனம் செய்துள்ள தமிழிசையை விமர்சித்து பேட்டி கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: வேலைக்கு குவைத் போன இளைஞரை ஒட்டகம் மேய்க்கச் சொல்லி டார்ச்சர்.. சுட்டுக் கொலை, தலையில் அடித்துக் கதறும் சீமான்

இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது:- ராகுலின் நடைபயணத்தை விமர்சனம் செய்து வரும் ஆளுநர் தமிழிசை அரசியல் செய்யக்கூடாது அல்லது அவரது பதவியை ராஜினாமா  செய்து விட்டு அரசியல் செய்ய வேண்டும். மேலும் அவருக்கு மனநிலை சரியில்லை என்று தோன்றுகிறது, அவர் ஒரு மன நல மருத்துவரை பார்க்க வேண்டும், ராகுலின் பாதயாத்திரையை தமிழிசை கேலி செய்து வருகிறார். தெலுங்கானாவில் நிரந்தர ஆளுநராக இருப்பவர் தமிழிசை, ஆனால் அங்கு அவரை அமைச்சர்கள் முதல்வர் புறக்கணிப்பதால் அவர் புதுச்சேரியில் உட்கார்ந்துள்ளார். பிரதமர் மோடி தினமும் மூன்று உடை மாற்றுகிறார்,

அவருக்கு இத்தாலி, ஜெர்மனியிலிருந்து உடைகள் வருகிறது. இப்படிப்பட்டவர்கள் ராகுல் காந்தி பற்றி பேச தகுதி இல்லை, ராகுலின் பாதையாத்திரை விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும், தற்போது புதுச்சேரி அரசியல் மானம் பறிபோயுள்ளது, இந்திய பிரஞ்ச் ஒப்பந்தத்தில், பிரெஞ்சு சொத்துக்களை பாதுகாப்போம் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவேதான் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரஞ்ச் துணை தூதர் முதலமைச்சரை சந்தித்து புகார் கூறியுள்ளார். இது புதுச்சேரி அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!