இதுக்கு நாங்க ஒத்துக்க மாட்டோம்... மத்திய அரசுக்கு தர்ம அடி கொடுத்த தம்பிதுரை....

 
Published : Dec 30, 2017, 09:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
இதுக்கு நாங்க ஒத்துக்க மாட்டோம்... மத்திய அரசுக்கு தர்ம அடி கொடுத்த தம்பிதுரை....

சுருக்கம்

deputy speaker Thambidurai says against centre government

மத்திய அரசு பெயரளவில்தான் கூட்டாட்சி தத்துவம் பற்றி பேசுகிறது, தமிழர்களின் உரிமையை மொத்தமாக தட்டி பறிக்கிறது என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பகிரங்கமாக கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, பாராளுமன்ற மேல்-சபையில் வரும் ஜனவரி 5-ந் தேதிக்குள் விவாதத்துக்கு வருகிறது. மசோதாவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 அம்சங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இதோடு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவதற்காக டெல்லி சென்றார் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

அங்கு அவரும், அ.தி.மு.க. எம்.பி.க்கள் சிலரும் சேர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தலைமையில் மத்திய அமைச்சர் கட்காரியை நேற்று முன்தினம் சந்தித்த இவர்கள். பிறகு, அவர்கள் நேற்று காலை டேங்கர் லாரி உரிமையாளர்கள் சிலருடன் சென்று பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை அவருடைய இல்லத்தில் சந்தித்தனர்.

 

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை; கியாஸ் டேங்கர் லாரிகள் அதிகமாக நாமக்கல் பகுதியில் உள்ளன. அந்த லாரி உரிமையாளர்கள் அகில இந்திய அளவில் தொழில் செய்வது வழக்கம். கியாஸ் சிலிண்டர் டெண்டர் உள்பட எந்த டெண்டர் வந்தாலும் அகில இந்திய அளவில் பங்கேற்று டெண்டர் எடுத்து தொழில் செய்கிறார்கள். அதை நசுக்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது மாநில சுயாட்சிக்கான அடிப்படை என்றாலும், தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமும் ஆகும்.

அதை குறிப்பிட்டு தமிழக லாரி உரிமையாளர்களின் இடர்பாட்டை பெட்ரோலியத்துறை மந்திரியிடம் விளக்கினோம். எதிர்ப்பையும் தெரிவித்தோம். இதுகுறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

மத்திய அரசு பெயரளவில்தான் கூட்டாட்சி தத்துவத்தை பேசுகிறதே தவிர, சில விஷயங்களில் அப்படி இருப்பது இல்லை. மொழி என்றால் இந்திதான் ஆட்சி மொழி என்கிறார்கள். டேங்கர் லாரிகளுக்கு டெண்டர் விடுவதாக இருந்தால் அந்தந்த மாநிலத்துக்குத்தான் கொடுப்பதாக சொல்கிறார்கள். இப்படி முரண்பட்ட கருத்து கொண்ட ஒரு ஆட்சியாக மத்திய அரசு உள்ளது. தமிழர்களின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.

எல்லா திட்டத்திலும் மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருக்கிறோம் என்பது கிடையாது. எங்களது உரிமைகள் பறிபோய்விடக்கூடாது என்று குரல் கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம் என கூறினார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!