ஆர்கே நகரில் ஆளுங்கட்சியை மீறி, ஜெயித்தது எப்படி? அதிரவைத்த திடுக் ரிபோர்ட்...

First Published Dec 30, 2017, 8:54 AM IST
Highlights
dinakaran supporters and sleeper cells in by elections


ஒன்றரை கோடி தொண்டர்கள், இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சி, தற்போது தமிழகத்தை ஆளும் கட்சி என இவ்வளவு பெரிய பலம் இருந்தாலும், ஒரு இடைதேர்தல், சுயேச்சை வேட்பாளர், அதுவும் புதிய சின்னம் எப்படி இந்த படுதோல்வி? அதிமுக அரசையே ஆட்டம் காண வைத்தது ஆர்.கே.நகர்.

கட்சியின் சின்னமான இரட்டை இலை கிடைத்துவிட்டால் போதும், அம்மா ஏற்கனவே ஜெயித்த தொகுதி, வேட்பாளராக மண்ணின் மைந்தன் மதுசூதனன், கூடுதலாக ஆளுங்கட்சி பலம், எதிராளியை சமாளிக்க வாக்களர்களுக்கு பணம் என்ற ரீதியின், கொஞ்சம் அலட்சியமாக இருந்தது அதிமுக, இரட்டை இலை கிடைத்தால் தான், தேர்தல்ல நிற்கணும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். அதிமுகவோ, இரட்டை இலை கிடைக்கலைன்னாலும் நாம தேர்தலில் நிக்கணும். அது தொப்பியா இருந்தாலும், இல்ல வேற எதுவுமா இருந்தாலும்” என்று சொல்லியிருந்தார் தினகரன். முதல்கட்டமாக திருச்சி கூட்டம் முடிந்த கையோடு ஆர்.கே.நகரில் யாருக்கும் தெரியாமல் தனது களப் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார் தினகரன்.

ஏற்கனவே, தொப்பி சின்னத்தில் வாக்குகேட்டபோது சுமார் 90 கோடியை கொட்டிய தினகரனின் பெயர் தொப்பியோடு ஒட்டிக்கொண்டது. இப்போது தொப்பியில்லை தினகரன் என்ற பெயர் மட்டும் போதும், வேறு சின்னம் என்ன அதுதான் அனைவரின் பிரஷரையும் எகிற வைத்த பிரஷர் குக்கர். சரி, ஆளும் கட்சியின் வேட்பாளரை சமாளிப்பது எப்படி? ஏற்கனவே அமைச்சர்கள், முதல்வர், எம்.எல்.ஏக்கள் தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர் அது பொது கூடவே அங்கு இருக்கும் ஸ்லீப்பர் செல்ஸ் அப்புறம் என்ன வெற்றி தான்.

பிரசாரம் முடிவடைய இருந்த கடைசி இரு தினங்களில், அதிமுக.,வினர் பணப் பட்டுவாடாவில் ஈடுபடுவதாக பரவலாகக் கூறப்பட்டது. குறிப்பாக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக., பெருந்தலைகள் எப்படி பண விநியோகத்தில் ஈடுபடுகிறார்கள் என்று தினகரன் தரப்பு புகார் கூறியதாகவும், ஊடகங்களில் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியும் பேசினார்கள்.

சரி, இப்போது ஸ்லீப்பர் செல் மேட்டருக்கு வருவோம்... தினகரன் வார்த்தைக்கு வார்த்தை ஸ்லீப்பர் செல்ஸ், ஸ்லீப்பர் செல்ஸ் என சொல்கிறாரே... யார்தான் அவர்கள்? உளவுத்துறையை நோட்டமிட எடப்பாடி சொல்ல, உளவுத்துறை ரிபோர்டில் கிடைத்தது ஷாக் ரிப்போர்ட்... ஏற்கனவே தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடும்போது தினகரனுக்கு ஆதரவாக வாக்குகேட்ட சில அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் தான் என்ற தகவல்.

ஆனால், அதிமுக.,வினர் சிலர் இப்போது புலம்புவதுதான் வேடிக்கையான ஒன்று. அதிமுக.,வுக்கு என்றே வாக்களிக்கும் விசுவாசிகளும் கூட, தினகரனுக்கு ஓட்டு போட்டதால் தான் இத்தகைய  வெற்றியை தினகரன் பெற முடிந்தது. அதற்காக, தினகரன் அடிக்கடி சொல்லும் ஸ்லீப்பர் செல்கள் அதிமுக.,வில் வேலை செய்தனராம். அதிமுக.,வுக்கு என்றே வாக்களிக்கும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களில் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் ஒதுக்கி, ஒரு லட்சம் ஓட்டுகளும் அதிமுக.,வுக்குக் கிடைக்க வேண்டும் என்று வேலை செய்வதாக ஒரு செய்தி பரப்பப் பட்டது. அப்போது, அதிமுக., விசுவாசிகளிடமே போய் தினகரன் ஆதரவாளர்கள் ஒரு புரளியைப் பரப்பினார்கள். 

அதாவது, அதிமுக., சார்பில்  அந்த வீட்டில் உள்ளவங்களுக்கு ஒருவருக்கு 6ஆயிரம் வீதம், 4 பேருக்கு 24 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க.. நீங்க இவ்ளோ தூரம் அதிமுக.,வுக்கு விசுவாசியா இருக்கீங்க. ஆனா உங்களுக்குக் கொடுக்காம, அவங்களுக்கெல்லாம் கொடுத்திருக்காங்க... என்று, அதிமுக., விசுவாசிகளை சரியாகக் கண்டறிந்து புரளி பரப்பினார்களாம். இதனால், தங்களுக்கு பணம் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில், அதிமுக.,க்கு ஓட்டு போட்டு வந்த பலர் தினகரனுக்கு மாற்றிப் போட்டதாகக் கூறியுள்ளனர். 

இதனை செய்தியாளர்களிடம் வெளிப்படையாகச் சொல்லியுள்ளார் தண்டையார்பேட்டை பகுதி வாக்காளர் பெண் ஒருவர். அதில், எங்கள் வீட்டில் ஆறு ஓட்டுகள் உள்ளன. 'குக்கருக்கு' ஆதரவாக பிரசாரத்திற்கு போனதால், எங்களுக்கு அதிமுக.,வினர் ரூ.6 ஆயிரம் தரவில்லை. ஜெயலலிதா விசுவாசியான எங்களுக்கு பணம் கொடுக்காத கோபத்தில் குக்கருக்கு ஓட்டு போட்டோம்... என்று கூறியுள்ளார். 

இப்படி, எத்தனை எத்தனை தில்லுமுல்லு..? தினகரன் தரப்பு செய்துள்ளது. அதிமுக.,வினர் மட்டுமல்ல முதல்வரையும் புலம்பவிட்டது குக்கர்  கேங்.

இதனையடுத்து, நேற்று நடந்த பதவிப்பிரமாணம் “அடையாறில் தொடங்கி கோட்டை வரை திருவிழா போல இருந்தது. ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தினகரன் பதவி ஏற்றுக்கொண்டார்.  டீமின் தில்லலங்கடியை கண்காணிக்க உளவுத்துறையில் ஒரு டீமை தயார் நிலையில் இருக்க சொன்ன எடப்படியார்... “தினகரனுக்கு இன்று எவ்வளவு கூட்டம் வந்தது என்பதில் தொடங்கி பதவி ஏற்பு விழாவில் யாரெல்லாம் பங்கேற்றார்கள் என்பது வரை எல்லாமே அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தாராம்.

அதுமட்டுமல்ல, அமைச்சர்கள் யாராவது அங்கே போய்விடுவார்களோ என்ற பதட்டம் அவருக்கு இருந்தது என்றும் சொல்கிறார்கள். ‘பணத்தைக் கொடுத்துதான் அவரு ஜெயிச்சாருன்னு நாம சொல்லிட்டு இருந்தாலும், அது மட்டுமே இந்த வெற்றிக்கு வாய்ப்பாக இருக்குமா என்பது எனக்கு இன்னும் சந்தேகமாகத்தான் இருக்கு. மக்கள் எப்போ என்ன நினைக்கிறாங்க என்பதை நாம் இன்னும் புரிஞ்சுக்காம இருக்கோமா என்பதையும் யோசிக்கணும்.

ஆர்.கே.நகரை மட்டுமே வெச்சு நாம கணக்கு போட வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் சொல்றாங்க. அதை தவிர்த்துட்டும் நாம கணக்கு போட முடியாது இல்லையா... நம்மகிட்ட இருக்கும் ஆட்களே தினகரன் சொல்ற மாதிரி அவரோட ஸ்லீப்பர் செல்லாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இப்ப இருக்கு... அதையும் கண்டுபிடிக்கச் சொல்லணும்.’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறாராம்”

click me!