பாஜக அரசு தமிழர்களின் உரிமைகளை பறிக்கிறது ! வெடித்துக் கிளம்பிய தம்பிதுரை !!

Asianet News Tamil  
Published : Dec 30, 2017, 07:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
பாஜக அரசு தமிழர்களின் உரிமைகளை பறிக்கிறது ! வெடித்துக் கிளம்பிய தம்பிதுரை !!

சுருக்கம்

BJP government slams Tamil rights Explosion

மத்தியில் ஆளும் பாஜக  அரசு பெயரளவில்தான் கூட்டாட்சி தத்துவம் குறித்து பேசுவதாகவும், ஆனால் தமிழர்களின் உரிமைகளை பறித்துக் கொண்டிருப்பதாகவும் நாடாளுமன்ற துணை சபாநாயகம் தம்பிதுறை மிகக் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இபிஎஸ் தலைமையிலான தமிழக அரசு எல்லாவிதத்திலும் மத்திய அரசுக்கு இணக்கமாகவே செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா மிகக்கடுமையாக எதிர்த்த ஜிஎஸ்டி, உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், சீட் தேர்வு போன்றவற்றை பாஜக அரசின் மிரட்டலுக்கு பணந்து தமிழக அரசு ஏற்றுக்கொண்டு செயல்பட மனுமதித்தாக தமிழக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இத்திட்டங்களை செயல்படுத்த தமிழக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் புறம்தள்ளி தமிழக அரசு இத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, பாராளுமன்ற மேல்–சபையில் வருகிற ஜனவரி 5–ந் தேதிக்குள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. இந்த திருத்த மசோதாவில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 அம்சங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்த கோரிக்கையையும், தமிழக டேங்கர் லாரி உரிமையாளர்களின் அகில இந்திய டெண்டர் உரிமைக்கான கோரிக்கையையும் மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவதற்காக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் டெல்லி சென்றார்.

அங்கு அவரும், அ.தி.மு.க. எம்.பி.க்கள் சிலரும் சேர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தலைமையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள்.

மேலும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சிலருடன் சென்று பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை அவருடைய இல்லத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது. கியாஸ் டேங்கர் லாரி தொழிலை நசுக்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது எல்.பி.ஜி. டெண்டர்களில் இனிமேல் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது மாநில சுயாட்சிக்கான அடிப்படை என்றாலும், தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டம் என குற்றம்சாட்டினார்.

மத்திய அரசு பெயரளவில்தான் கூட்டாட்சி தத்துவத்தை பேசுகிறதே தவிர, சில பிரச்சனைகளில்  அப்படி இருப்பது இல்லை. மொழி என்றால் இந்திதான் ஆட்சி மொழி என்கிறார்கள் என குறிப்பிட்டார்.

முரண்பட்ட கருத்து கொண்ட ஒரு ஆட்சியாக மத்திய அரசு உள்ளது என்றும் . தமிழர்களின் உரிமைகளை மத்தியில் ஆளும் பாஜக  அரசு பறிப்பதாக பகிரங்கமாக தம்பிதுரை குற்றம்சாட்டினார்..

எல்லா திட்டத்திலும் மத்திய அரசுடன் அதிமுக அரசு இணக்கமாக இருக்கிறது என்பது இல்டில என்றும், தமிழக அரசின்  உரிமைகள் பறிபோய்விடக்கூடாது என்று குரல் கொடுத்துவிட்டு வருவதாகவும் தம்பிதுரை தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

'இலை துளிர்க்கும்... இனி குரல் ஒலிக்கும்..!' அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
ரஜினியை மிரட்டிய திமுக.. புது குண்டை தூக்கிப்போட்ட ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?