தமிழ் மொழி செம்மொழி, தமிழ் கவிதைகளுக்கு ஈர்ப்பு சக்தி உள்ளது...!! உருகி உருகி பேசிய துணை ஜனாதிபதி...!!

Published : Feb 29, 2020, 02:28 PM IST
தமிழ் மொழி செம்மொழி, தமிழ் கவிதைகளுக்கு ஈர்ப்பு சக்தி உள்ளது...!! உருகி உருகி பேசிய  துணை ஜனாதிபதி...!!

சுருக்கம்

தமிழ் கவிதைகளுக்கு உலக அளவில் ஈர்ப்பு உள்ளது .  அதேபோல் காலங்களை கடந்து ஞானமாக உள்ள திருக்குறள் மனித குலத்திற்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது .

தமிழ் கவிதைகளுக்கு உலக அளவில் ஈர்ப்பு உள்ளது என துணை ஜனாதிபதி வெங்கைய்ய  நாயுடு  கூறியுள்ளார் ,  அதேபோல் திருக்குறள் மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளது  என்றும் அவர் தெரிவித்துள்ளார் .  மாமல்லபுரத்தில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற  விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இந்த விழாவில் பேசிய அவர் ,  மாமல்லபுரம் என்ற பெயரே நம் மனங்களில் மரியாதையையும் பய பக்தியையும் உண்டாக்குகிறது.  இது இயற்கையும் கலாச்சாரமும் ஒன்றாக சங்கமித்துள்ள இடமாகும் .  அவற்றை மதிப்பதும்  பாதுகாப்பதும்   நமது கடமை இருக்க வேண்டும் என்றார்,   உயிருடன் உள்ள நகரங்களில் மிகப்பழமையான வற்றில் மாமல்லபுரமும்  ஒன்று .   இந்தியாவில் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மொழியாக தமிழ் மொழி உள்ளது என்றார். 

அதன் பழமையான இலக்கியங்கள்  உத்வேகம் தருபவையாக உள்ளது .  தமிழ் கவிதைகளுக்கு உலக அளவில் ஈர்ப்பு உள்ளது .  அதேபோல் காலங்களை கடந்து ஞானமாக உள்ள திருக்குறள் மனித குலத்திற்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது .  தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் போன்ற பெரிய கோவில்களில் நம்முடைய கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையின் மேன்மையை திறமைகளை பறைசாற்று சாட்சிகளாக உள்ளது என அவர் புகழ்ந்தார்.   

 

 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவைச் சுற்றி வளைக்கத் தயாராகும் சீனா..! நான்கு நாடுகளில் ஸ்கெட்ச்.. அம்பலப்படுத்திய அமெரிக்கா..!
காங்கிரஸ் வந்தாலும் வேண்டாம்.. ஜாதி, ஊழல் கட்சிகளும் வேண்டாம்... விஜய் எடுக்கும் புது ரூட்..!