மெர்சலின் அலையில் அடித்து செல்லப்பட்ட டெங்கு..!

 
Published : Oct 21, 2017, 02:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
மெர்சலின் அலையில் அடித்து செல்லப்பட்ட டெங்கு..!

சுருக்கம்

dengue issue hide by mersal

தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. டெங்குவைத் தடுக்க தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கடந்த சில வாரங்களை ஒப்பிடும்போது தற்போது டெங்குவால் உயிரிழப்போர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

கடந்த வாரங்களில் தினமும் சராசரியாக 15 பேர் தமிழகம் முழுவதும் உயிரிழந்தனர். தற்போது டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளபோதிலும் உயிரிழப்புகளே ஏற்படுவதில்லை என்று கூற முடியாது. 

சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு கடுமையாக உள்ளது. தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருந்த டெங்கு விவகாரம் பிரதான பிரச்னையாக இருந்த நிலையில், மெர்சல் திரைப்பட சர்ச்சை உருவெடுத்து டெங்கு பிரச்னை மறைக்கப்பட்டது.

தமிழகத்தின் ஹாட் டாபிக்காக டெங்கு இருந்த நிலையில், டெங்குவைத் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நேரத்தில் மெர்சல் படத்திற்கு தணிக்கை சான்று அளிக்கும் பிரச்னை உருவானது. அதன்பிறகு மெர்சல் திரைப்படம் வெளியாகுமா? என்பதுதான் தமிழகத்தின் பிரதான பிரச்னையாக ஆக்கப்பட்டது. டெங்குவால் எத்தனை பேர் இறந்தால் என்ன? என்ற அளவுக்கு அதைக் கண்டுகொள்ளாமல் மெர்சல் பிரச்னை பெரிதாக்கப்பட்டது.

தமிழகத்தில் பலர் டெங்குவால் குழந்தைகளை இழந்து தீபாவளி கொண்டாட முடியாமல் வேதனையில் இருந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பிழைத்தால் போதும் என உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் இதெல்லாமா முக்கியம்? தீபாவளிக்கு மெர்சல் வருமா வராதா? என்பது பிரதான பிரச்னையாக ஆக்கப்பட்டது மற்றும் அப்படியாகவே பார்க்கப்பட்டது.

ஒருவழியாக திரைப்படம் வெளியான பின்னர், ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிரான தவறான கருத்துக்கள் படத்தில் இருப்பதாகவும் அதை நீக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர்கள் கொந்தளிப்புடன் விடாபிடியாக ஆக்ரோஷமாக செயல்பட்டனர். 

ஆனால், அதே பாஜக தலைவர்கள், டெங்குவைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றோ, தமிழகத்தின் மற்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதிலோ இவ்வளவு ஆர்வமாகவும் ஆக்ரோஷமாகவும் செயல்பட்டனரா? என்றால் வாய்ப்பே இல்லை.(தமிழகத்தின் பிரச்னைகளுக்குக் காரணமே பாஜகதான் என்கிறீர்களா?)

டெங்குவால் ஏற்பட்ட உயிரிழப்புகளை தினமும் சொல்லிக்கொண்டிருந்த ஊடகங்களும் மெர்சலின் வசூல் பற்றியும் விமர்சனங்கள் பற்றியும் அந்த திரைப்படத்தை யார் யார் பார்த்தார்கள் என்பதிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

இப்படியாக டெங்குவும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் மறைக்கப்பட்டு மெர்சல் தமிழத்தின் பிரதான பிரச்னை என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டது.

சுனாமியாக உருவெடுத்த மெர்சலின் அலையில் டெங்கு அடித்து செல்லப்பட்டது.
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!