பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்த நாட்டை பாஜக காப்பாற்றியுள்ளதாம்… அருண் ஜெட்லி பேச்சு….

 
Published : Jan 15, 2018, 09:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்த நாட்டை பாஜக காப்பாற்றியுள்ளதாம்… அருண் ஜெட்லி பேச்சு….

சுருக்கம்

Demonitisation saved india told arun jaitly

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும்  கறுப்பு பண ஒழிப்பு மூலம் பா.ஜ.க  அரசு இந்த நாட்டை காப்பாற்றியுள்ளது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகடமியில் நேற்று நடைபெற்றது. . இதில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, புத்தகங்களை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய அருண் ஜெட்லி,  மோடி ஆட்சிக்கு முன்பிருந்த அரசு எதற்கும் உதவாத அரசாகவே இருந்தது. ஒரு குடும்பமே நாட்டை கைபற்றி ஆட்சி செய்து வந்தது. நாட்டில் எதிர்புணர்வை தூண்டுவது சில சூழ்ச்சி சக்திகள் தான். நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என குரல் கொடுப்பவர்களுக்கு காங்கிரஸ்  கட்சி ஆதரவளிக்கிறது.

ரூபாய் நோட்டு வாபஸ் ஊழலை ஒழிக்க எடுக்கப்பட்ட மிக முக்கிய நடவடிக்கை. கடினமான மனநிலையில்தான் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆருண் ஜெட்லி தெரிவித்தார்.

நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது என்றும் . பிரதமரின் நடவடிக்கையால் நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!