
எழுத்தாளர், பத்திரிகையாளர், விமர்சகர், நாடக ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட ஞாநி என்கிற சங்கரன் இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 64.
ஞாநி என்றும் ஞாநி சங்கர் என்றும் தமிழக மக்களால் அறியப்பட்ட ஞாநி 1954 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேத பிறந்தார். காங்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அவரது சொந்த ஊர்.
தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர், இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர்.
சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தி வந்தார். . பரீக்ஷா என்ற நாடக குழுவை கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் போன்ற பணிகளை அனைவரும் பாராட்டும்படி செய்து வந்தார். ஞாநி இயக்கிய பெரியார் குறித்த தொலைகாட்சிப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டார். 2014 சூன் 28 அன்று அக் கட்சியிலிருந்து விலகினார்.[1]
செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் அவரை பேச்சு, எழுத்து, நடிப்புத் துறைகளில் ஈடுபடுத்தியது. பிறகு தாம்பரம், சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார்.
கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தபோது 1971 தேர்தலில் காமராஜர்- ராஜாஜி – சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி – கருணாநிதியின் அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார் பின்னர் சென்னை பல்கலைக்காகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார் அதன் பின்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து சிறந்த அரசியல் விமர்சகராக மிகச் சிறப்பான பணியாற்றி வந்தார். தொலைக்காட்சிகளில் இவர் எடுத்து வைக்கும் வாதங்கள் அறிவுப்பூர்வமாக இருக்கும்.
இந்நிலையில் அவருக்கு திடீரென உடல் குறைவு ஏற்பட்டது. இதையடுத்த சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார்.
பகுத்தறிவாளர்கள், துணிச்சலான பத்திரிகையாளர்கள் போன்றோருக்கு ஞாநியின் மரணம் ஓர் பேரிழப்பாகும்.