இந்தா பிடிங்க மோடி ஊழல் செய்ததற்கான ஆதாரம்…. தப்ப விட மாட்டேன் ராகுல் ஆவேசம்….

 
Published : Dec 14, 2016, 05:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
இந்தா பிடிங்க மோடி ஊழல் செய்ததற்கான ஆதாரம்…. தப்ப விட மாட்டேன் ராகுல் ஆவேசம்….

சுருக்கம்

இந்தா பிடிங்க மோடி ஊழல் செய்ததற்கான ஆதாரம்…. தப்ப விட மாட்டேன் ராகுல் ஆவேசம்….

கறுப்புப் பணம் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் வகையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கும் வகையில் அதற்கான மாற்று வழிகளை மோடி அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இன்று வரை பணத்திற்காக பொதுமக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் முன்பு தவமிருந்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க பணம் இல்லாமல் சராசரி மக்கள் தவித்து வருகின்றனர்.

மோடியின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தின இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 4 வார காலமாக நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர்கள் பங்பேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி ஊழல் செய்ததற்காக ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார்.

ஏழைகளுக்கு எதிரான முடிவை எடுத்துள்ள பிரதமர் மோடியை தப்பவிடமாட்டேன் என்றும் ராகுல் காந்தி மிகக் கடுமையாக பேசினார்.

 

PREV
click me!

Recommended Stories

பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!
ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!