சசிகலாவுக்கு எதிராக கிளம்பும் தொண்டர்கள்…..பேனரில் மை வீச்சு….திருச்சியில் பரபரப்பு…

Asianet News Tamil  
Published : Dec 14, 2016, 06:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
சசிகலாவுக்கு எதிராக கிளம்பும் தொண்டர்கள்…..பேனரில் மை வீச்சு….திருச்சியில் பரபரப்பு…

சுருக்கம்

சசிகலாவுக்கு எதிராக கிளம்பும் தொண்டர்கள்…..பேனரில் மை வீச்சு….திருச்சியில் பரபரப்பு…

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் யார் அ.இ.அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்பது என்பதில் தொடர்ந்து சர்ச்சை நிலவிவருகிறது.

ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் தோழியாக வசித்து வந்த திருமதி சசிகலா, அக்கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த சில நாட்களுக்கு  முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சசிகலாவுக்கு எதிரானவர் என்றும், கட்சிக்கு பொதுச் செயலாளர் என கருத்து தெரிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் திரு.செங்கோட்டையன் திடீரென சசிகலாவின் ஆதரவாளராக மாறினார்.

சசிகலாதான் அ.தி.மு.க.வுக்கு பொதுச்செயலாளராக வர வேண்டும்  என அறிக்கை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், அதை செய்தியாளர்களிடமும் உறுதிப்படுத்தினார்.

இதேபோன்று கழக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் தம்பிதுரையும் பின்வாங்கினார். அவரும் சசிகலாதான் அ.தி.மு.க.வுக்கு அடுத்தாக தலைமை ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.

கட்சியில் தனக்கு எதிராக கிளம்பும் அனைவரையும் படிப்படியாக ஆதரவளிக்கச் செய்து வரும் சசிகலா தொண்டர்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்.

சசிகலாவுக்கு எதிராக சென்னை போயஸ் கார்டன் அருகிலேயே தொண்டர்கள் திடீரென போராட்டத்தில் இறங்கினர்.சென்னையின் பல்வேறு இடங்களிலும் சசிகலாவுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் பேஸ்புக்,வாட்ஸ்அப்,டுவிட்டர் போன்ற வளைதளங்களில் சசிகலாவுக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்சியில் சின்ன அம்மா கழகத்திற்கு தலைமை ஏற்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்து வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய பேனரில் யாரோ சிலர் கருப்பு மையை வீசி அழிக்க முயன்று தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

Sanatana Dharma: சனாதனத்தை ஒழிக்கவே வந்துள்ளோம்.. தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேச்சு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!
DA Hike: அடுத்தடுத்து சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்..! அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 60% உயர்வு..