
அரசியலில் இறங்குவாரா ஜெ. அண்ணன் மகள்…….தீபாவுக்கு ஆதரவான பேனரால் பரபரப்பு…
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பது யார் என்பது குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.ஓபிஎஸ் உள்ளிட்ட கழகத்தின் மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் ஒருசில அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரியலுர் அருகே ஜெ வின் அண்ணன் மகள் தீபாவை மக்களின் சின்ன அம்மா என்றும் ஜெ.தீபாவின் தலைமையில் அணி திரள்வோம் என்ற மிகப்பெரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.
ஆனால் இந்த பேனர் வைத்த சில நிமிடங்களிலேயே அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் அதனைக் கிழித்து எறிந்தனர்.இதனால் அங்கு மோதல் ஏற்படும் நிலை உருவானதையடுத்து போலீஸார் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினர்.