”தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சி கவிழும்” - விடாமல் குறி சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்...!!!

 
Published : Jul 23, 2017, 06:31 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
”தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சி கவிழும்” - விடாமல் குறி சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்...!!!

சுருக்கம்

DEMOCATE Chairman Vijayakants wife Premalatha said that this unpopular rule will not be stable and will come soon.

மக்கள் விரும்பாத இந்த ஆட்சி கண்டிப்பாக நிலைக்காது எனவும், விரைவில் தேர்தல் வரும் எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.  

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹெட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதனால் விவசாயம் பாதிக்கும் எனவும் நிலத்தடி நீர் பாதிக்கும் எனவும், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து அப்பகுதி மக்கள் 2 கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் இந்த போராட்டம் 103 வது நாளாக தொடர்கிறது.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும், நெடுவாசலுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது பேசிய பிரேமலதா, மக்கள் வேண்டாம் என்று சொல்லும் போராட்டத்தை அரசு ஏன் கொண்டு வர வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

மக்கள் விரும்பாத இந்த ஆட்சி கண்டிப்பாக நிலைக்காது எனவும், விரைவில் தேர்தல் வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு