மத்திய அரசை விளாசி.. சொலிசிடர் ஜெனரலை நடுங்க வைத்த நீதிபதி... இரவோடு இரவாக மாற்றியதற்கு சீமான் கண்டனம்..!

By vinoth kumarFirst Published Feb 28, 2020, 6:03 PM IST
Highlights

கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில் மிஸ்ரா உட்பட மூன்று பாஜக முக்கிய தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் உத்திரவிட்டார். பின்னர் இரவே நீதிபதி முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் ஒரே இரவில் இடமாற்றம் செய்யப்படுவதுமான செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் ஜனநாயகத்துரோம் என சீமான் ஆவேசமாக கூறியுள்ளார். 

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் உள்ள மஜுபூர், ஜாப்ராபாத், குரேஜ்காஸ், சாந்த்பாக், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதில், 40-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அப்போது கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில் மிஸ்ரா உட்பட மூன்று பாஜக முக்கிய தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் உத்திரவிட்டார். பின்னர் இரவே நீதிபதி முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- டெல்லியில் நடந்த அறவழிப் போராட்டத்தை கலவரமாக மாற்றி மத்திய அரசின் எத்தேச்சதிகாரப்போக்கையும், ஆட்சியாளர்களின் மதத்துவேசப் பேச்சையும் கண்டித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அவர்கள் ஒரே இரவில் வேறு மாநிலத்திற்கு பந்தாடப்படுவது இந்தியாவின் உச்சபட்ச ஜனநாயக அமைப்பான நீதித்துறையின் மீது கல்லெறியும் கொடுஞ் செயலாகும்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தன்னாட்சி அமைப்புகளின் தன்னுரிமையை பறித்த பாசிசம் தலைவிரித்தாடும் தற்காலச்சூழலில் ஜனநாயகத்தை காப்பாற்ற சட்டமன்றம், நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தும் மேலாதிக்க அமைப்பாக மக்கள் நம்பிக்கைகொண்டிருக்கும் நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் இருப்பது கண்டனத்துக்குரியது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமானி அரசியல் இடையூறு காரணமாகப் விலகுவதும், மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்துபோவதும், தற்போது உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் ஒரே இரவில் இடமாற்றம் செய்யப்படுவதுமான செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் ஜனநாயகத்துரோம் என சீமான் ஆவேசமாக கூறியுள்ளார். 

click me!