சாதி உணர்வு அற்று இந்தியராக ஒன்றிணைவோம்..!! சாதிகட்சி கிருஷ்ணசாமியின் சவடால் பேச்சு...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 28, 2020, 5:09 PM IST
Highlights

1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் எல்லை வரையறுக்கப்படவில்லை மோடி பிரதமராக வந்த பிறகே நாட்டின் எல்லை வரையறை செய்யப்பட்டுள்ளது .

குடியுரிமை சட்டம் குறித்து தவறாக பிரச்சாரம் செய்கின்றனர்  என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சில அரசியல் கட்சிகள் 15 சதவீத வாக்குகளுக்காக தவறாக பிரச்சாரம் செய்வதாக அவர் புகார் கூறினார் .  திருச்சியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது , அக்கூட்டத்தில் கலந்துகொண்ட  புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அதில் உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர் , 

குடியுரிமை சட்டம்  ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானது என்று ஓட்டு வங்கி அரசியல் செய்யும் சில கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றார் அரசியலமைப்புச் சட்டம் சொல்லாத எதையும் பிரதமர் மோடி செய்யவில்லை, காஷ்மீர் மாநிலத்துக்கு பிற மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம்களின் போக முடியாத நிலை இருந்தது இப்போது அந்த நிலை மாறியுள்ளது இதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் .  1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் எல்லை வரையறுக்கப்படவில்லை மோடி பிரதமராக வந்த பிறகே நாட்டின் எல்லை வரையறைசெய்யப்பட்டுள்ளது .  

குடியுரிமை சட்டத்தால் ஏற்படும் பாதிப்பு என்ன என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி கேட்டதற்கு ஒரு எதிர்க்கட்சியினர் கூட பதில் கூறவில்லை அப்படியென்றால் அதில் பிரச்சனை இல்லை என்றுதானே அர்த்தம் .  சாதி உணர்வை விட்டு இந்தியர்களாக ஒன்றிணைய வேண்டும்,  மனசாட்சி இல்லாத சில அரசியல் கட்சிகள் சிறுபான்மையினரின் 15 சதவீத வாக்குகளை குறிவைத்து  குடியுரிமைச் சட்டம் குறித்து தவறாக பிரச்சாரம் செய்கின்றனர் .  அந்த பிரச்சாரத்திற்கு இஸ்லாமியர்கள் இறையாகி விடக்கூடாது . இஸ்லாமியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அப்போது அவர் வலியுறுத்தினார். 
 

click me!