டெல்லி கலவரம்; பலியானவர்கள் பட்டியலை வெளியிட்டது டெல்லி மருத்துவமனை!!

By Thiraviaraj RMFirst Published Feb 28, 2020, 8:59 PM IST
Highlights

வடகிழக்கு டெல்லி குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிப்பாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,வன்முறை சம்பவங்களால் டெல்லி நாளுக்கு நாள் பதட்டத்தில் இருக்கிறது. இதுவரைக்கும் சுமார் 42பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பது டெல்லி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது மத்திய அரசு, டெல்லி அரசும் கலவரக்காரர்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்தும் டெல்லி போலீஸ் அசால்ட்டாக இருந்து விட்டது என்கிற குற்றச்சாட்டு தற்போது எழுந்திருக்கிறது.

T.Balamurukan.

டெல்லி பகதூர் அரசு மருத்துவமனை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து டெல்லி வன்முறையில் பலியானவர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது.அதில் துப்பாக்கி சூட்டில் 12 பேரும், தீ காயத்தில் 3பேரும்,குத்தி கொலை செய்யப்பட்டவர்கள் 7பேர் எனவும் வெளியிடப்பட்டுள்ளது.

வன்முறை பாதித்த பகுதிகளில் துணை ராணுவத்தினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடா்ந்து நடந்த வன்முறை தொடா்பாக விசாரிக்க இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்களை டெல்லி காவல்துறை அமைத்துள்ளது.இதனிடையே, மூன்று நாட்களாக நடைபெற்ற வன்முறையில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை, இன்று 42 ஆக உயா்ந்தது. 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா். டெல்லி காவல் துறை, துணை ராணுவப்படையைச் சோ்ந்த மொத்தம் 7000 ஆயிரம் வீரா்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனா். அசம்பாவிதம் ஏதும் நிகழாத நிலையில் சில பகுதிகளில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஒரு சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு டெல்லியில் வன்முறை ஏற்படலாம் என்று உளவுத் துறை முன்கூட்டியே எச்சரித்ததாகவும், ஆனால், டெல்லி போலீஸார் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடகிழக்கு டெல்லி சந்த் பாக்கில் இந்துக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதாகவும், புலனாய்வுத் துறை ஊழியா் அங்கித் சா்மாவைக் கொலை செய்த குழுவை வழிநடத்தியதாகவும் அப்பகுதி ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹீா் உசேன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இக்குற்றச்சாட்டை அவா் மறுத்துள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக 106 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், கைது செய்யப்பட்டவா்கள் தொடா்பாக சரியான தகவல் இல்லை. இந்த வன்முறை தொடா்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சோலிசிட்டா் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி உயா்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.டெல்லி முதல்வா் கேஜரிவால், வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவா்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். மேலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவா்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

வன்முறையில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் அவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், ஆம் ஆத்மி கட்சியினருக்கு தொடா்பு இருப்பதாகத் தெரியவந்தால் இரட்டை தண்டனை வழங்கப்படும் என்றும் , வன்முறையின் போது புத்தகங்கள், சீருடைகளை இழந்த பள்ளி மாணவா்களுக்கு புதிய புத்தகங்கள், சீருடைகளை டெல்லி அரசு இலவசமாக வழங்கும் என்றும் அரவிந்த்கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார்.
 
click me!