"உள்நோக்கத்துடனே டெல்லியில் போராட்டம் நடைபெறுகிறது" - தமிழிசை காட்டம்

Asianet News Tamil  
Published : Apr 22, 2017, 03:25 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
"உள்நோக்கத்துடனே டெல்லியில் போராட்டம் நடைபெறுகிறது" - தமிழிசை காட்டம்

சுருக்கம்

delhi protest is a selfish says tamilisai

டெல்லியில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

வறட்சி நிவாரணம், வங்கி கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வந்தது.

அரை நிர்வாண போராட்டம், எலி தின்னும் போராட்டம், சாட்டியடி போராட்டம், அரை மொட்டை அடிக்கும் போராட்டம் என தினமும் ஒவ்வொரு விதமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.

இதையடுத்து மத்திய அரசு பெரிதாக கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில், வரும் 25 ஆம் தேதி தமிழக விவாசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சியினர் பங்கேற்கும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை நிறுத்தி விட்டு தமிழகத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதைதொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்த டெல்லி போராட்டம் ஒரு முடிவுக்கு வருகிறது. ஸ்டாலின் அழைப்பை ஏற்று விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்த அறிவிப்பை தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார். மேலும் நாளை டெல்லி வரும் தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் குடிநீர் பிரச்சனைக்காக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், அமைச்சர்களின் நடவடிக்கை விஞ்ஞானத்துக்கு எதிராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

நீராதரத்தை பெருக்க தக்க நடவடிக்கை எடுக்க சொன்னால் அமைச்சர் தக்கையை வைக்கிறார் என கிண்டல் அடித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?