தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? - டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Asianet News Tamil  
Published : May 22, 2017, 10:57 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? - டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

சுருக்கம்

delhi HC ivestigates dinakaran about two leaves bribe

அந்நிய செலாவணி வழக்கை விட இரட்டை இலை லஞ்ச வழக்கு டிடிவி தினகரனை ஆக்டோபஸ் கரங்களைப் போல வளைத்து சுருட்டி முற்றாக ஆக்கிரமித்துள்ளது.

கொஞ்சம் கூட மூச்சு விடாதபடி வழக்கின் இறுக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்குக் கொண்டே போவதால் திணறி வருகிறார் டிடிவி தினகரன். திகார் சிறையில் திக் பிரமை பிடித்தது போல் இருக்கும் டிடிவி மற்றும் சுகேஷ் சந்திரசேகரரிடம் டெல்லி போலீசார் அண்மையில் குரல் மாதிரியை பதிவு செய்திருந்தனர்.

இந்தச் சூழலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை நிர்ணயிக்க லஞ்சம் அளிக்க முயன்றதாக மேலும் ஒரு வழக்கு டிடிவி தினகரன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆம் தேதி தனக்கு ராசியான எண் என்பதால், மே 5 ஆம் தேதி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யுமாறு சுகேஷ் சந்திரசேகரரை டிடிவி.தினகரன் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

லஞ்ச பேரம் குறித்து தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகரின் தொலைபேசி உரையாடல்களை ஏற்கனவே கைப்பற்றியுள்ள போலீசார், அதனை ஆய்வு செய்வதற்காக இருவரிடம் குரல் சோதனை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் குற்றவியல் சட்டத்தில் இதற்கு இடமில்லை என்று கூறி குரல் சோதனைக்கு தினகரன் மறுத்துவிட்டார். 

இதற்கிடையே இரட்டை இலை லஞ்ச வழக்கில் டிடிவி.தினகரன்  மற்றும் சுகேஷ் சந்திரசேகர் தொடர்ந்த  ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. 

PREV
click me!

Recommended Stories

திமுக கூட்டணியில் பிளவு? முதல் ஆளாக தாவெக-வுக்கு ஓடும் சிபிஎம்! அதிரடி பின்னணி!
விஜய் கூட்டணிக்கு வேண்டாம்..! டெல்லியின் கணக்கை தவிடுபொடியாக்கும் எடப்பாடி..! அதிமுக-வின் 'மாஸ்டர் பிளான்'!