இந்த விஷயத்தில் மட்டும் சுணக்கம் காட்டாதீங்க.. விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஓ.எஸ்.மணியன்..!

By vinoth kumarFirst Published Aug 30, 2021, 3:53 PM IST
Highlights

சம்பா பருவத்துக்கான காப்பீடு திட்டம் இன்னமும் தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால், உணவுத் துறை அமைச்சா் காப்பீடு பிரிமியத் தொகை செலுத்தாமலேயே காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்கிறார். 

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதில் அரசு சுணக்கம் காட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை அருகே செருதியூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன்;- கடந்த அதிமுக ஆட்சியில் 118 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது 82 கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறந்துள்ளது. மேலும், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதிலும் அரசு சுணக்கம் காட்டுவதாக குற்றம்சாட்டினார். 

விவசாயிகள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்த நெல்லை உதாசீனப்படுத்தாமல் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என ஓ.எஸ். மணியன் வலியுறுத்தியுள்ளார். சம்பா பருவத்துக்கான காப்பீடு திட்டம் இன்னமும் தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால், உணவுத் துறை அமைச்சா் காப்பீடு பிரிமியத் தொகை செலுத்தாமலேயே காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்கிறார். 

அதிமுக அரசு வெள்ள நிவாரணம், காப்பீட்டுத்தொகை இரண்டையும் வழங்கியது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், நெல் கொள்முதலில் தாமதம் குறித்து சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அதிமுகவினர் நிச்சயம் கேள்வி எழுப்பும் என்று கூறினார்.

click me!