
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அண்ணனான ஜெயராமனுக்கு தீபா என்ற மகளும் தீபக் என்ற மகனும் உள்ளனர். ஜெயராமன் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் அப்போலா மருத்துவமனையில் இருந்த போது தீபக் அடிக்கடி சென்று தன் அத்தையை பார்த்து வந்தார்.
ஜெயலலிதாவின் இறுதி சடங்கை சசிகலாவும் தீபக்கும் தான் இணைந்து செய்தனர். இந்நிலையில் ஜெயலலிதா இறந்த சில நாட்களிலே தீபா தனி கட்சியை ஆரம்பித்தார்.
ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் இருந்து நேற்று வரை வாயே திறக்காத தீபக் திடீரென ஜெயலலிதா எழுதி வைத்த உயில் தன்னிடம் தான் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உயிலில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் என் பெயரிலும் எனது சகோதரி தீபா பெயரிலும் தான் உள்ளதாக தெரிவித்துள்ளார். போயஸ்கார்டன் பங்களா, பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டிடங்கள் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள வீடு, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட 8 சொத்துக்கள் தனக்கும் தன் சகோதரிக்கும் சொந்தமானது என்று கூறியுள்ளார்.
தீபாக்கின் இந்த அதிரடி பேச்சு சசிகலா தரப்பை கதிகலங்க செய்துள்ளது.