ஒருத்தரையும் விடக் கூடாது! எல்லாரையும் விசாரிக்கணும்! விசாரணை ஆணையத்தில் பகீர் கிளப்பிய தீபக்!

First Published Dec 14, 2017, 6:19 PM IST
Highlights
Deepak Pressmeet


ஜெயலலிதா மரணம் தொடர்பாக இருந்த சந்தேகங்களை ஆணையத்திடம் விளக்கியதாகவும், ஜெ. மரணம் குறித்து சந்தேகம் கூறும் அனைவரிடமும் கட்டாயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆணையத்தில் கோரியுள்ளதாக தீபக் கூறியுள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். ஜெ. மரணத்தில் சசிகலா குடும்பத்தன் மீது சந்தேகம் இருப்பதாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தனிநபர் விசாரணை ஆணையத்தில் தீபா கூறியிருந்தார். இந்த நிலையில், தீபாவின் தம்பியுன தீபக் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே மருத்துவமனையில் இருந்தனர். சிகிச்சை பெற்ற புகைப்படமும் வெளியிடப்படவில்லை.
 
இதனால் ஜெ. மரணத்தில் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த விசாரணை ஆணையும் ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்த அனைவரையும் விசாரித்து வருகிறது.
 
இதனடிப்படையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு நேற்று விசாரணைக்கு ஆஜராகினார். 

இதனை அடுத்து, சசிகலா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த தீபாவின் தம்பி தீபக் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தீபக், ஜெயலலிதா மரணம் தொடர்பாக இருந்த சந்தேகங்களை ஆணையத்திடம் விளக்கியுள்ளேன் என்றார். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் கூறும் அனைவரிடமும் கட்டாயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விசாரணை ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக தீபக் கூறினார்.

click me!