சொன்னபடி மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி...! எப்போது தெரியுமா?

 
Published : Dec 14, 2017, 06:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
சொன்னபடி மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி...! எப்போது தெரியுமா?

சுருக்கம்

Actor Rajinikanth meets fans from 26th to 31st.

வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார். காலை 8 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ரசிகர்களுடனான சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது பற்றி பல்வேறு தகவல்கள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தாலும் இன்னும் அதைப் பற்றி அதிகார பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை

ஏற்கனவே கடந்த மே மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து அவர்கள் மத்தியில் அரசியல் குறித்து சூசகமாகப் பேசியது எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியது. 

மேலும் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டபோது... போருக்குத் தயாராகுங்கள் என்றும். நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன். நாட்டில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது என மெர்சலாக பேசினார். 

இதனால் இந்த தடவை அரசியலில் குதிப்பது கன்ஃபார்ம் என ரசிகர்கள் துள்ளி குதித்தனர். 
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயண ராவ் ரஜினி விரைவில் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்று கூறினார். 

இந்நிலையில், வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார். காலை 8 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ரசிகர்களுடனான சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி
விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!