பத்திரிக்கையாளர்களிடம் கடுகடுப்பு காட்டிய தீபா... ஜெ.பாணியில் பிரஸ்மீட்

 
Published : Mar 19, 2017, 01:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
பத்திரிக்கையாளர்களிடம் கடுகடுப்பு காட்டிய தீபா...  ஜெ.பாணியில் பிரஸ்மீட்

சுருக்கம்

deepa pressmeet in jayalalitha style

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஊடகங்களின் மைக்குகளை அப்புறப்படுத்துமாறு தீபா உத்தரவிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திக்கும் தீபா, சமீபகாலமாக அடிக்கடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி வருகிறார்.. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தியாகராயநகரில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து கையசைத்து வந்த அவர், தற்போது மீடியாக்கள் முன்பு ஆயிரம் வாலா பட்டாசு வெடிக்கத் தொடங்கியிருக்கிறார்…

இதற்கிடையே கணவர் மாதவனின் தனிக்கட்சி பிரச்சனை குறித்து தீபா வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பொன்னாடை போர்த்தி இருந்த மேஜையின் மீது மைக்குகளை வைத்து தீபா வருகைக்காக செய்தியாளர்கள் காத்திருந்தனர்.

நேரம் ஆகிறதே செய்தி அனுப்ப வேண்டுமே என்ற பரிதவிப்பில் பத்திரிகையாளர்கள் காத்துக் கிடக்க கதவு சட்டெனத் திறந்தது. 

உள்ளே இருந்து வேகமாக வந்த நபர் ஒருவர், மேஜையின் மீது இருக்கிற மைக்குள் அனைத்தையும் அம்மா அகற்றிவிடச் சொல்லிவிட்டார் என்று உரக்கக் கூற அதிர்ந்தே போனார்களாம் செய்தியாளர்கள்…

வந்தது வந்தாயிற்று ஒரு போட்டோவையாவது எடுத்துச் சென்றுவிடுவோம் என்று கருதி மைக்குகளை செய்தியாளர்கள் அப்புறப்படுத்தினர். பின்னர் வந்த தீபா ஜெயலலிதா பாணியில் தனி மைக்கில் குமுறியிருக்கிறார்

பத்திரிகையாளரான தீபாவுக்குத் தெரியாதா இந்நிகழ்வும் செய்தி ஆகும் என்று!

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்