தீபா அணிக்கு கல்தா... டாட்டா காட்டிய செளந்தரராஜன்..!!

Asianet News Tamil  
Published : Mar 19, 2017, 01:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
தீபா அணிக்கு கல்தா... டாட்டா காட்டிய செளந்தரராஜன்..!!

சுருக்கம்

soundarajan left from deepa team

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தொடங்குவதற்கு காரணமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.செளந்தரராஜன், ஓ.பி.எஸ். அணிக்கு திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார்…

அடுத்து என்ன செய்யலாம் என்று தீபா தட்டுத்தடுமாறிய போது எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவையை உருவாக்குங்கள் என்று அறிவுரை சொல்லி உடன் இருந்தவர் கே.செளந்தர்ராஜன். இவர் திருச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் , முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் ஆகவும் பதவி வகித்தவர்.

தீபா அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்து சில நாட்களே ஆனாலும் தனக்கென ஓர் ஆதரவாளர்களை அவர் திட்டியதின் பின்னணியில்  செளந்தரராஜனின் செயல்பாடுகள் அதிகமாம்..

இப்படி அரசியலில் அனைத்துமாய் இருந்த செளந்தர்ராஜன் திடீரென ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவளித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்…

மனமாற்றத்துக்கு என்ன காரணம்

தீபாவின் அண்மைக்கால செயல்பாடுகள் யாவற்றிலும் செளந்தரராஜனுக்கு துளியும் உடன்பாடு இல்லையாம். தீபாவின் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகும் செளந்தரராஜனின் முகம் இறுக்கமாகவே இருந்தது என்கின்றனர் விடயமறிந்தவர்கள்…

தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கு, அதனைத் தொடர்ந்து புதிதாக கட்சி ஆரம்பிக்கப் போவதாக மாதவன் அறிவித்தது என அனைத்துமே செளந்தரராஜனின் அதிருப்திக்கு காரணம் என சொல்லப்படுகிறது..

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்… ஒரு கட்டத்தில் முடியாது என்ற நிலை வந்த போது வேறு வழியின்றி தனது ஆதரவை ஓ.பி.எஸ்.க்கு செளந்தரராஜன் தெரிவித்திருக்கிறார் என்கின்றனர் உடனிருந்தவர்கள்…

செளந்தரராஜனைப் போன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கனும் தீபா மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் ஆர்.கே.நகர் தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பாகவே தீபா அணியின் கூடாரம் காலியாகும் என்று விமர்சனம் செய்கின்றர் அரசியல் நோக்கர்கள்..

இன்னும் எத்தனை திருப்பங்கள் அரங்கேறப்போகிறதோ?

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!