"ஆளை விடுங்க... ஆர்.கே.நகரில் யாருக்கும் ஆதரவு இல்லை..!!" - போட்டுடைத்த திருமாவளவன்

Asianet News Tamil  
Published : Mar 19, 2017, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
"ஆளை விடுங்க... ஆர்.கே.நகரில் யாருக்கும் ஆதரவு இல்லை..!!" - போட்டுடைத்த திருமாவளவன்

சுருக்கம்

thirumavalavan pressmeet in chennai

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்..

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலை சந்திப்பது என எடுத்துள்ள முடிவில் தங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.

இத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், போட்டியிடாது என்று குறிப்பிட்ட அவர், தொலைநோக்குப் பார்வையுடன் தேர்தலை அணுக வேண்டும் என்ற கருத்து இருந்ததாகக் கூறினார். 

ஆனால் பல்வேறு கருத்துகள் இருந்தும் தேர்தல் நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாற்றவில்லை என்றாலும் அக்கட்சியுடனான தோழமையிலும், நட்புறவிலும் எந்த விரிசலும் இல்லை என்றார். 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!