எம்ஜிஆர் பிறந்த நாளில் புதிய அறிவிப்பு - தீபா அதிரடி பேட்டி

First Published Jan 7, 2017, 6:22 PM IST
Highlights


அரசியலுக்கு நிச்சயம் வருவேன் எம்ஜிஆர் பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.

தனிக்கட்சி துவக்கும் எண்ணம் இருப்பது போல் காண்பித்துள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தலைமைக்கு யார் வரவேண்டும் என்பதில் பலவித கருத்துகள் உருவாகின.

கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள்  சசிகலாவை முன்னிருத்தினர். அவருக்கு தமிழகம் முழுதும் கட்சியின் கீழ் மட்ட தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளர் ஆனார்.


மறுபுறம் தீபா சசிகலாவுக்கு பெரிய தலைவலியாக இருந்து வருகிறார். சசிகலாவை எதிர்ப்பவர்கள் மெல்ல மெல்ல அவரது தலைமையை நாட  தீபா மட்டும் தனியாக இயங்கி வருகிறார்.

இவரை பார்க்க ஜெயலலிதா போல் நடை உடை பாவனைகள் , குரல் என்ற எண்ணத்தில் அவரை ஜெயலலிதாவை போலவே தொண்டர்கள் கருதுகின்றனர்.

தினமும் தன்னெழுச்சியாக தொண்டர்கள் அவரது வீட்டுக்கு படையெடுக்கின்றனர். அவரை அரசியலுக்கு வரச்சொல்லி கோரிக்கை வைக்கின்றனர்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக நிச்சயம் நான் உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து வருவேன் என தெரிவித்தார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தீபா கூறியதாவது. அம்மா அவர்கள் மீது தொண்டர்கள் வைத்திருக்கும் பாசத்தையும் ,நம்பிக்கையையும் உணர முடிகிறது.

கே: ஜெயலலிதாவுக்கு நடிகை என்ற மவுசும் பின்னர் அரசியலில் நீண்ட காலம் இருந்த அனுபவமும் இருந்தது உங்களுக்கு என்ன இருக்கிறது?
மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் தான் இதெல்லாம் நடக்கிறது.மக்கள் விரும்பினால் வருவேன். அனைவரின் கருத்துக்களை ஆலோசனைகளை பெற்றுத்தான் வருவேன் என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். 
கே: ஜெயலலிதா உங்களை அரசியல் வாரிசாக அறிவிக்கவில்லை அப்புறம் எப்படி நீங்கள் தலைமைக்கு ஆசைப்படுகிறீர்கள்


நானாக சொல்லவில்லையே மக்களது விருப்பம் அதுவாக இருக்கிறது. அவர்கள் ஜெயலலிதாவின் இடத்தில் இன்னொருவரை வைத்து பார்க்க விரும்புகிறார்கள் . 
கே: உங்களுக்கு என்று தனிப்பட்ட விருப்பம் இல்லையா
இருக்கிறது, நிச்சயம் உண்டு. மக்கள் விருப்பத்தை கேட்டு ஆலோசித்து எனது எண்ணத்தை அறிவிப்பேன்
கே: எம்ஜிஆர் பிறந்த நாளில் அறிவிப்பை எதிர்பார்க்கலாமா?


 நிச்சயமாக எதிர்பார்க்கலாம். உறுதியாக எதிர்பார்க்கலாம்.
கே: சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலாளராக ஆகும் தகுதி உள்ளதாக நினைக்கிறீர்களா
இந்த கேள்வியை மக்களிடம் போய் கேட்டுவிட்டு என்னிடம் வந்து சொல்லுங்கள் 
கே: 17 ஆம் தேதி உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி சொல்வீர்களா
அரசியல் பிரவேசம் பற்றித்தான் சொல்வேன். மற்றவைகள் பற்றி இப்போது சொல்லமாட்டென். மக்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு அனைவரின் கருத்துக்களை கேட்டுத்தான் முடிவெடுப்பேன்.
கே: இதற்காக தமிழகம் முழுதும் பிரச்சார பயணம் செல்வீர்களா
அப்படியெல்லாம் இல்லை , ஆனால் அனைவரின் கருத்துக்களையும் கேட்பேன். இதற்காக ஒரு அலோசனையும் நடத்த உள்ளேன்.
கே: சசிகலாவை சந்திக்க வாய்ப்பு சந்தீப்பீர்களா
இந்த கேள்வியே அவசியமற்றது. இவ்வாறு தீபா பேட்டி அளித்தார்.

click me!