முதன்முறையாக வாய்திறந்து சத்தமாக பேசினார் தீபா - 'உறுதியாக வருவேன்' எனவும் கர்ஜனை..!!

Asianet News Tamil  
Published : Jan 07, 2017, 05:16 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
முதன்முறையாக வாய்திறந்து சத்தமாக பேசினார் தீபா - 'உறுதியாக வருவேன்' எனவும் கர்ஜனை..!!

சுருக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது அத்தை மறைந்த சோகத்தில் இருந்து வந்தார்.

கடந்த 30 நாட்களாக துக்கம் அனுஷ்டிக்க வேண்டி இருந்ததால் அவரின் குரலின் சத்தம் கூட சரியாக கேட்காமல் இருந்தது.

அந்தளவுக்கு வர குரலை உயர்த்தாமல் சத்தமின்றி பேசினார்.

ஆனால் இன்று தனது சன்னமான குரலை உடைத்து குரலை உயர்த்தியுள்ளார் தீபா.

தீபா வீடு அமைந்துள்ள டி.நகர் சிவஞானம் தெருவில் கூடிய ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் முன்பாக தீபா இன்று மைக்கில் பேசினார்.

பலத்த கரகோஷங்களுக்கு இடையே பேசிய தீபா தான் எழுதி வைத்திருந்த கவிதையை படித்தார்.

அதிமுக தொண்டர்கள் பொறுமை காக்கவேண்டும் என்றும் நிச்சயமாக உங்களுக்காக பணியாற்ற வருவேன் எனவும் உறுதியாக தெரிவித்தார்.

நாளைய சமுதாயத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மக்கள் பணியாற்ற காத்திருப்பதாக தீபா தெரிவித்தார்.

மேலும் எம்ஜியாரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் தனது தொண்டர்களை பார்த்து தீபா கேட்டு கொண்டார்.

கடந்த நாட்களை போல் இல்லமல் மிகுந்த உற்சாகதோடும் சத்தமான குரலோடும் தீபா பேசியதால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

திரிஷாவுடன் திருமணம்..? மகாராணியை மாற்றும் விஜய்? வாயடைக்க வைக்கும் ரூ.250 கோடி செட்டில்மெண்ட்!
30 வருஷ உழைப்பா..? நேத்து வந்த பயலா..? நடுவானில் விஜய்யிடம் கதறிய புஸ்ஸி ஆனந்த்..!