“கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாரா தீபா...?” - அவரே அளித்தபரபரப்பு பேட்டி

Asianet News Tamil  
Published : Dec 28, 2016, 11:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
“கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாரா தீபா...?” - அவரே அளித்தபரபரப்பு பேட்டி

சுருக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறந்த சகோதரர் ஜெயகுமார். ஜெயராமன் – சந்தியா தம்பதியரின் மகனான ஜெயகுமாருக்கு தீபா, தீபக் என இரு குழந்தைகள். தீபாவின் சொந்த அத்தைதான் ஜெயலலிதா.

தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு தீபா என்ற ஒரு சொந்தம் இருப்பதே, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, ஒரு சில நாட்களுக்கு பின் தெரியவந்தது. பத்திரிகையாளர்கள் வட்டாரத்திலும், அதிமுக மூத்த நிர்வாகிகள் வட்டாரத்திலும், தீபா என்ற உறவினர் ஜெயலலிதாவுக்கு உண்டு என தெரியும்.

ஆனால், அவரை பற்றி எந்த தகவலும், யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இந்த நிலையில் தான், ஜெயலலிதாவின் இறப்பிற்கு, முதல்நாள், தன்னை ஆஸ்பத்திரிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என போராடியபோது, தீபாவின் முழுமையான முகம், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது.

அப்போது முதலே தீபா, லைன் லைட்டுக்குள் வந்துவிட்டார். தீபக் போன்று அமைதியாக இருந்துவிட்டு இருந்தால், தீபா இவ்வளவு பிரபலம் அடைந்து இருக்கமாட்டார். மீடியாவில் முகம் காட்ட தொடங்கிய நாளில் இருந்தே, அவரை சுற்றி ஒரு சர்ச்சை வந்து கொண்டு இருக்கிறது.

குறிப்பாக தீபா நெற்றியில் பொட்டு வைக்காதது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தீபா பொட்டு வைக்காததால், அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மறிவிட்டதாகவும், அதனால்தான் தனது அத்தையான ஜெயலலிதா, தீபாவை வீட்டை விட்டு விரட்டியதாகவும், மீண்டும் சேர்க்காததற்கு அதுதான் காரணம் என்றும் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்களில் வேகமாக, ஆதாரமற்ற தகவல்கள் பரவின.

இது உண்மையாக இருக்குமோ…? என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது. இதுதொடர்பாக ஒரு தினசரி பத்திரிகை நிருபர் தீபாவிடம் கேள்வையை எழுப்பியபோதுத, அவர் பதிலளித்தார்.

“என்னை கிறிஸ்தவர் என சொன்னார்கள் என்றால் நான் கிறிஸ்தவர்தான். முஸ்லீம் என்றால் நான் முஸ்லீம்தான். இந்து என்றால் நான் இந்துதான். யார் யாருக்கு எப்படி பிடிக்கிறதோ அப்படி அழைத்து கொள்ளுங்கள்” என சாதுர்யமாக பதில் அளித்தார். மேலும், “பொட்டு வைக்காதது ஒரு தற்செயலான நிகழ்வுதான்” என தீபா பதிலளித்துள்ளார். தனது கணவர் மாதவன், பேட்ரிக்காக மாரியதாக வந்த தகவல்களை தீபா மறுத்தார். 

PREV
click me!

Recommended Stories

TN Politics: 60 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்.. ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்!
TN Politics: தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? உஷாராகும் விசிக, இடதுசாரிகள்.. ஸ்டாலினுக்கு சிக்கல்!