காவல் நிலையத்தில் ஜெ.தீபா - உதவியாளர் மீது கணவன் மாதவன் புகார்...!

 
Published : Oct 27, 2017, 08:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
காவல் நிலையத்தில் ஜெ.தீபா - உதவியாளர் மீது கணவன் மாதவன் புகார்...!

சுருக்கம்

deepa husband mathavan complaint about raja

ஜெ.தீபாவின் உதவியாளர் ராஜா தனக்கும் தங்கள் ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாக தீபாவின் கணவர் மாதவன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் . இதையடுத்து போலீஸ் அழைத்ததால் ஜெ.தீபா காவல்நிலையம் வந்துள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்தார். அதற்காக புதிதாக பேரவை ஒன்றை கூட தொடங்கினார். 

அப்போது தீபாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவரது கணவர் மாதவன் தான். ஆனால் கட்சி ஆரம்பித்ததும் தீபாவுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் பொறுப்பு கொடுக்கப்படுவதாக  பேரவையில் விரிசல் வந்தது. 

இதனால் ஜெ.தீபாவின் உதவியாளர் ராஜாவுக்கும் கணவர் மாதவனுக்கும் முற்றி கொண்டது. இதையடுத்து மாதவனும் தீபாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதைதொடர்ந்து மாதவன் தனி கட்சி தொடங்கினார். 

பின்பு தீபாவுடன் இணைந்தார். சேர்ந்து விட்டோம் என இருவரும் பேட்டியெல்லாம் கொடுத்தனர். இந்நிலையில், இன்று மாதவன் திடீரென ஜெ.தீபாவின் உதவியாளர் ராஜா தனக்கும் தங்கள் ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

இதையடுத்து போலீஸ் அழைத்ததால் ஜெ.தீபா காவல்நிலையம் வந்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!