ஏஸியா நெட் எக்ஸ்க்ளூசிவ்!ஜெயலலிதா மறைவுக்குப் பின் அரசியலில் தலையெடுத்திருக்கும் தீபாவின் செயல்பாடுகள் பொதுவாக கிச்சுக்கிச்சு மூட்டுபவையாகத்தான் பார்க்கப்படுகின்றன.இந்த சூழலில் இன்று தீபாவின் வீட்டிற்குள் ’ஐ.டி. அதிகாரி’ என்று கூறிக் கொண்டு ஒருவர் நுழைந்து ரவுசு காட்டியதும், பின் ஒரு கட்டத்தில் அவர் தலை தெறிக்க ஓடி எஸ்கேப் ஆனதும் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கின்றன.இந்த விவகாரம் தொடர்பாக மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் தீபாவின் கணவர் மாதவன். புகாரில் ‘எங்கள் வீட்டில் குற்றம் நிகழ்த்த யாரேனும் அவரை அனுப்பினார்களா?’ என்று மாதவன் திகிலாக குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் இந்த பரபரப்பு குறித்து மாதவனிடம் நம் ஏஸியாநெட் இணைய தளம் பிரத்யேக பேட்டி எடுத்தது. அப்போது மாதவன் பகிர்ந்து கொண்ட விஷயங்களாவன...ஏஸியாநெட்: ஐ.டி. அதிகாரி என்று சொல்லி ஒற்றை நபர் வந்து நின்றதும் வீட்டுக்குள்எப்படி அனுமதித்தீர்கள், இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்? மாதவன்: காலையில ஐந்தரை மணியிலிருந்து வீட்டு வாசல்ல அந்த நபர் நிற்கிறதா செக்யூரிட்டி சொன்னார். பட் நான் ஏழு மணிக்குதான் அவரை பார்த்தேன்.அடையாள அட்டையெல்லாம் காண்பிச்சார். மித்தேஸ்குமார் அப்படின்னு அதுல பெயர் இருந்துச்சு. இதையெல்லாம் செக் பண்ணிட்டுதான் உள்ளே வரச்சொன்னேன்.இந்த நேரத்துல எங்க அட்வோகேட்டையும் வரச்சொன்னேன். வந்து விசாரிச்ச அட்வோகேட்டுக்கு டவுட் வந்துடுச்சு. அதனாலதான் அவரு போலீஸுக்கு போன் பண்ணினார். போலீஸும் வந்து அவரை விசாரிச்சுட்டு இருக்கிறப்ப திடீர்னு ஒரு சத்தம்! தப்பிச்சு ஓட ஆரம்பிச்சுட்டார்.இந்த சம்பவத்தை அதிர்ச்சிகரமாதான் பார்க்கிறேன்.ஏஸியாநெட்: உங்க அதிர்ச்சியை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்!மாதவன்: இது அந்த தனி மனுஷனோட அட்டெம்ப்டா தெரியலை. அவருக்கு பின்னாடி யாரோ இருந்து கைடு பண்ற மாதிரி தெரியுது. அந்த வழிகாட்டி நபர் அல்லது நபர்கள் யார்? அப்படின்னு கண்டுபிடிக்க வேண்டியது போலீஸின் பொறுப்பு.ஏஸியாநெட்: இந்த சம்பவத்தை தீபா மேடம் எப்படி எடுத்துக்கிட்டாங்க?மாதவன்: அதை மேடத்துட்டதான் கேட்கணும்.ஏஸியாநெட்: மித்தேஸ்குமார் வந்தப்ப தீபாவும் வீட்டுக்குள்ளே இருந்திருப்பாங்கதானே! அவங்க உணர்வை நீங்க கவனிக்கலையா? மாதவன்: இல்லே நான் மட்டும்தான் வீட்டில் இருந்தேன். தீபா மேடம் அப்போ வீட்டில் இல்லை.ஏஸியாநெட்: ராஜா மீண்டும் பேரவைக்குள் வந்ததில் உங்களுக்கு இஷ்டமில்லை, தீபாவின் உயிருக்கு ஆபத்து இருக்குதுன்னு கூட நீங்க கவலைப்பட்டீங்க. இந்த நேரத்தில் இவ்வளவு தைரியமாக ஒரு அந்நியர் உள்ளே வருகிறார்!மாதவன்: எனக்கு தீபாவின் மேலேயும், அவங்களோட அரசியல் வளர்ச்சி மேலேயும் பெரிய அக்கறை இருக்குது. ஆனா என்னோட மனசை அவங்க புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க.ஏஸியாநெட்: உங்க பிரச்னையை நீங்க தீபாவிடம் சொல்லலாமே!மாதவன்: எங்களை சுத்தி நிறைய சதி நடக்குதுங்க. யார், யார் என்ன பண்றாங்கன்னே புரியலை. என்னை இந்த வீட்டிலிருந்து வெளியே விரட்டணும்னு சிலர் திட்டம் போடுறாங்க. ஆனா இதையெல்லாம் தீபாகிட்ட சொன்னா, ‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை’ன்னு சொல்றாங்க.தீபா இப்படி பண்றதாலே, நான் இப்போ பேரவை நடவடிக்கையில் தலையிடுறதில்லை. ஒதுங்கியே நின்னு கவனிக்குறேன்.ஏஸியா நெட்: இன்னொரு பக்கத்துல உங்களோட கட்சி செயல்பாடுகளை தீவிரப்படுத்திட்டீங்க போல!மாதவன்: ஜெயலலிதா அம்மாவோட பிறந்த நாளை சிறப்பா கொண்டாடுறதை எங்க கட்சியோட இலக்கா வெச்சு பண்றோம்.நான் அரசியல்ல வளர்ந்துட்டு வர்றது பலருக்கு பொறாமையா இருக்குது. என்னை அடக்கி வைக்கலாம், மிரட்டலாமுன்னு திட்டம் போடுறாங்க.ஆனா புரட்சித்தலைவி அம்மாவின் ஆசி இருக்கிறதாலே நான் அரசியல்ல விறுவிறுன்னு வளர்றேன்”....என்கிறார்.